பாலாஜி தலையில் குப்பை கொட்டும் ஐஸ்வர்யா: பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 31 Jul, 2018 11:31 am
31-7-biggboss-promo

பிக்பாஸ் முதல் பிரோமோவில் பாலாஜியின் தலையில் ஐஸ்வர்யா குப்பைகளை கொட்டுவது போன்ற காட்சிகள் காட்டப்படுகின்றது.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே இன்றைய நாளுக்கான சண்டை தொடங்கிவிட்டது. ஐஸ்வர்யாவுக்கும் பாலாஜிக்கும் இடையே இருக்கும் பிரச்னையை தான் இந்த வாரம் முழுக்க பார்க்கவிருக்கும். அதன்படி இன்றைய முதல் பிரோமோவில், பாலாஜி தன்னை பற்றி பேசிய காட்சிகளை ஐஸ்வர்யா பார்க்கிறார். எப்போதோ பேசிய காட்சிகளை இப்போது வேண்டுமென்றே ஐஸ்வர்யாவுக்கு காட்டுகிறார் பிக்பாஸ். 

கோபமடையும் ஐஸ்வர்யா, "அவனை வெச்சி செய்யுறேன்" என்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தான் வீட்டின் ராணி போல. அவருடன் ராணுவ வீரராக டேனி இருக்கிறார். பாலாஜி பேசுவதை கேட்டு கோபமான ஐஸ்வர்யா, சோஃபாவில் அமர்ந்திருக்கும் பாலாஜியின் தலையில் குப்பையை கொட்டுகிறார். இதெல்லாம் தப்பு இல்லையா ஐஸு?

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close