முழு சந்திரமுகியாக மாறிய ஐஸ்வர்யா!: பிக்பாஸ் பிரோமோ 2

  Newstm Desk   | Last Modified : 31 Jul, 2018 01:10 pm
31-7-biggboss-promo-2

தொடர்ந்து "இந்த பொண்ணு குழந்தை" என ஐஸ்வர்யாவை பற்றி கூறி வருகின்றனர் போட்டியாளர்கள். அதனை மாற்றுவதற்காக சில பல யுக்திகளை ஐஸ்வர்யா கையில் எடுத்திருக்கிறார் போல. ஆனால் அவை அனைத்தும் தவறானதாக இருக்கின்றன. 

முதல் பிரோமோவில் பாலாஜியின் தலையில் குப்பையை கொட்டு ஐஸ்வர்யா, இரண்டாவது பிரோமோவிலும் பாலாஜியையே டார்கெட் செய்கிறார். பெட்ரூமில் தனியாக படுத்திருக்கும் பாலாஜியிடம், வேற எங்கயாவது போய் படுத்துக்கோ மாமா... உன் மேல மிளகாய் பொடி, தண்ணீலாம் போட போறாங்களாம் என்று கூறுகிறார் சென்றாயன்.

அதனைப் பொருட்படுத்தாமல் அங்கேயே இருக்கிறார் பாலாஜி. பின் பாலாஜி முகத்தில் ரூம் ஸ்பிரேவை அடிக்க சொல்கிறார் தலைவி ஐஸ்வர்யா. மற்றவர்கள் அப்படியெல்லாம் பண்ண வேண்டாம் என்று  கூறுகின்றனர். 

பின் தூங்கி கொண்டு இருக்கும் பாலாஜி அருகில் சென்று ஐஸ்வர்யா சத்தம் போட்டுக்கொண்டு இருக்கிறார். இது வெறும் டாஸ்க்காக கூட இருக்கலாம். ஆனாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close