எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு: பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 09:34 am
8-01-biggboss-promo-1

ஐஸ்வர்யாவின் சர்வாதிகார ஆட்சியின் கொடுமைகளையே பிக்பாஸின் முதல் பிரோமோ காட்டுகிறது. 

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஐஸ்வர்யாவின் சர்வாதிகார ஆட்சியே நடக்கிறது. தன்னை பற்றி மற்றவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை அறிந்ததும் கோபம்  தலைக்கேறி இஷ்டத்துக்கு நடந்து கொள்கிறார் ஐஸ்வர்யா. நேற்றைய தினம் பாலாஜியின் மீது குப்பை கொட்டியதை பற்றிய விவாதங்களே இன்னும் பல நாட்களுக்கு தொடரும் என்ற நிலையில் இன்று நடக்கவிருக்கும் காட்சிகள் மேலும் பல சர்ச்சைகள் கிளப்பும் என எதிர்பார்க்கலாம்.

இன்றைய முதல் பிரோமோவில், சென்றாயன் குடித்து கொண்டு இருக்கும் காபியை பிடிங்கி செல்கிறார் ஐஸ்வர்யா. இனி யாருக்கும் டீ, காபி எல்லாம் கிடையாது என்கிறார். காபி குடிக்கிறதால என்ன ஆகிடும் என கத்துகிறார் சென்றாயன். 

உடனே ஐஸ்வர்யா ஒருமையில் பேச, சென்றாயனும் அப்படியே பேசுகிறார். இறுதியில் ஐஸ்வர்யா சொல்லும் வார்த்தையால் கோபமடையும் சென்றாயன், அவரை அடிக்க கை ஓங்குகிறார். வாய் சண்டை... கை சண்டையாகும் வரை பிக்பாஸ் அமைதியாக பார்த்துக்கொண்டு தான் இருப்பார் போல.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close