அப்போவே ஐஸ்வர்யாவை அடிச்சிருக்கணும்: பிக்பாஸ் பிரோமோ 2

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 01:24 pm
01-8-biggboss-promo-2

ஐஸ்வர்யாவின் சர்வாதிகாரத்தை தடுக்க யாருமே இல்லையா... என்று போட்டியாளர்கள் அழும் அளவிற்கு அட்டகாசம் செய்து வருகிறார் ராணி. நேற்று பாலாஜியின் மீது குப்பை கொட்டிய பிறகு நடக்கும் காட்சிகள் இன்று காட்டப்படும். 

வெளியாகி உள்ள இரண்டாவது பிரோமோவில், பாலாஜியிடம் பொன்னம்பலம் பேசிக்கொண்டு இருக்கிறார். "குப்பையை கொட்டின  அப்போவே கேட்டு இருக்கணும். அப்போ அமைதியா இருந்துட்டு, அவங்க போனா பிறகு அடிச்சிடுவேன்  சொல்றது சரியில்ல" என பொன்னம்பலம் கூறிக்கொண்டு இருந்தார். 

"என்ன பண்ணலாம்" என சென்றாயனிடம் பேசிக்கொண்டு இருந்தார் பாலாஜி. இதையெல்லாம் ராணி ஐஸ்வர்யா தனது அறையில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தார். 

பின் ஐஸ்வர்யாவிடம் மும்தாஜும், சென்றாயனும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இருந்தனர். இப்படி இல்ல அப்படி என்று  அவர்கள் மன்னிப்பு கேட்கும் விதத்தை கூட குத்தம் கூறிக் கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா.   

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close