முன்னாடி வந்து பேச தகுதியில்லையா உனக்கு: பிக்பாஸ் பிரோமோ 3

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 02:26 pm
biggboss-promo-3

ஐஸ்வர்யா பஞ்சாயத்தோடு இன்றைய நிகழ்ச்சி முடிந்துவிடாது போல, மகத்தும் ஷாரிக்கும் புதிய பிரச்னையை தொடங்கி வைக்கிறார்கள்.

சர்வாதிகாரி ஐஸ்வர்யாவை போலவே, அவரது பொது மக்களும் அவருக்கு ஈடுகொடுத்து அராஜக செயல்களை நிகழ்த்துகிறாகள். இன்றைய கடைசி பிரோமோவில், மும்தாஜுக்கு லிப்ஸ்டிக் வைக்க முயற்சி செய்கிறார் ஷாரிக். பேட்டா, பேட்டா என  பாசமாக கூறி வந்த மும்தாஜ், இந்த சமயத்தில் தான் ஷாரிக்கை முழுமையாக வெறுக்க தொடங்குவார் என தெரிகிறது. எதுக்கு இப்போ எனக்கு லிப்ஸ்டிக் வைக்கனும் என மும்தாஜ் கேட்க... "நான் வெச்சி விடணும்" என்று அடம் பிடிக்கிறார் ஷாரிக். வேணும்னா உன் வாயில வெச்சிக்கோ என தடுக்கிறார் மும்தாஜ் .

தொடர்ந்து மும்தாஜ் செல்லும் இடமெல்லாம் சென்று, பின்னால் இருந்து லிப்ஸ்டிக் வைத்துவிட முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் ஷாரிக். உடனே கோபத்தோடு, "எப்பவும் பின்னால இருந்து தான் வருவியா, முன்னாடி நின்னு பேச உனக்கு தகுதியில்லையா" என கேட்கிறார் மும்தாஜ். அதானே?

போதாக்குறைக்கு மகத்தும் மும்தாஜை கலாய்க்க... மூவரில் யாரோ கைசண்டையை தொடக்கி வைத்திருக்கிறார்கள். அந்த காட்சிகள் பிரோமோவில் காட்டப்படவில்லை. அதைப்பார்த்த ராணி, "நோ ஃபிசிக்கல் வைலன்ஸ்" என கத்துகிறார். 

இந்த வாரம் கமலுக்கு ஏகப்பட்ட பஞ்சாயத்தை தீர்த்து வைக்க வேண்டிய வேலை இருக்கும் போல!

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close