வீட்டிற்கு திரும்பினார் வைஷ்ணவி: பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2018 09:46 am
vaishnavi-back-to-home-biggboss-promo-1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனி அறையில் இருந்த வைஷ்ணவி இன்று மீண்டும் வீட்டிற்குள் செல்கிறார். 

ஐஸ்வர்யாவின் சர்வாதிகார டாஸ்க் இன்றுடன் முடிவடைந்து விடும் என்று நம்பலாம். ஆனால் நேற்றைய பிரோமோவில் காட்டப்பட்ட காட்சிகளே இன்று நிகழ்ச்சியில் காட்டப்படவில்லை. இந்நிலையில் இன்றைய பிரோமோவில் அடுத்த ட்விஸ்ட் காட்டப்படுகிறது. 

சென்ற வாரம் எவிக்‌ட் ஆகிவிட்டார் என்று அறிவிக்கப்பட்டு பின் தனியறைக்கு அனுப்பப்பட்ட வைஷ்ணவி, மீண்டும் இன்று வீட்டிற்குள் செல்கிறார். அவரை பார்த்ததும் மற்ற போட்டியாளர்கள் உற்சாகம் அடைகின்றனர். அவர்கள் சந்தோஷத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வீட்டில் இருப்பவர்களை நேர்மை அடிப்படையில் வரிசைப்படுத்தும் டாஸ்க் வைஷ்ணவிக்கு வழங்கப்பட்டது.

அதன் படி முதலில் அவர் டேனியை அழைக்கிறார். ஆனால் அவருக்கு எந்த இடம் கொடுக்கிறார் என்று தெரியவில்லை. இந்த டாஸ்க்கின் முடிவிலாவது போட்டியாளர்கள், தங்களை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டால் சரி.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close