#BiggBoss Day 45: ஷாரிக் குடும்பம் மட்டும் அவ்வளவு ஒஸ்தியா?

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2018 01:08 pm
what-happened-in-biggboss-day-45

சர்வாதிகார காட்சிகளே நேற்றும் தொடங்கியது. முதல் நாளிலேயே பார்வையாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துவிட்டார்கள் என்பதால், நேற்று நடந்த விஷயங்கள் பெரிதாக தெரியவில்லை. எத்தனை பெரிய வன்முறையாக இருந்தாலும் போக போக பழகிவிடும். அது போல தான் நேற்றைய பிக்பாஸ் பார்க்கும் போது இருந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பஞ்சாயத்தோடு தொடங்கியது. ராணி அறையில் நேரடியாக ஒளிப்பரப்பான காட்சிகள் குறித்து ஐஸ்வர்யா பொதுமக்களிடம் விசாரித்துக் கொண்டு இருந்தார். 

தன்னை பற்றியும், மும்தாஜ் பற்றியும் பேசியதை பற்றி கேட்டார். பாலாஜி மழுப்பி மழுப்பி பதில் அளித்து முடிப்பதற்குள், மீண்டும் ஐஸ்வர்யா கத்த தொடங்கினார். இதே போல சில நிமிடங்கள் கடக்க, மகத்தும் அங்க தான் இருந்தார் என்றார் ஐஸ்வர்யா. நான் அங்க இல்ல என தொடங்கிய மகத், தொடர்ந்து தன் மீது பழிவர கத்த தொடங்கினார். மற்றவர்கள் கத்தினால், தனது சர்வாதிகார சக்தியால் அடக்கும் ஐஸ்வர்யா இப்போது அமைதியாக பேசினார். இது போன்று கத்தி கத்தி பேசும் இடங்களில் பெரும்பாலும் மகத்தே வெல்கிறார். 

"ஏதாவது பிரச்னைனா தண்டனைய கொடுத்துட்டு போங்க" என தன் மீது உள்ள தவறை உணர்ந்தோ, அல்லது எதுக்கு கத்திட்டு இருக்கிறதலாம் கேட்கணும் என்றோ நினைத்து கூறினார் பாலாஜி. 

தானாகவே வந்து தண்டனையை கேட்டாலும் ஐஸ்வர்யா விடுவதாக இல்லை. இருக்கு இருக்கு அடுத்த தண்டனையை தான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று தனது உடைந்த தமிழில் கூறினார். ஐஸ்வர்யாவின் பிரத்யேக தமிழில் இதுபோன்று பேசுவதை கேட்கும் போது ஓவர் டெரராக தான் இருக்கிறது. 

இதே போன்று கத்திக்கொண்டே ஐஸ்வர்யா கார்டன் ஏரியாவுக்கு செல்ல, "இன்னொரு தடவ இப்படி பண்ணா செவுல் திரும்பிடும்" என்றார் பாலாஜி. ஐஸ்வர்யாவின் சர்வாதிகாரம் தொடங்கியதில் இருந்து அவர் இப்படி தான் பேசிக்கொண்டு இருக்கிறார்.ஆனால் ராணியின் அராஜகம் நடக்கும் போது அமைதியாக இருந்துவிட்டு பின்ன்ர் அவர் இல்லாத சமயத்தில் கத்துக்கிறார். ஒரு வேலை சனிக்கிழமை சிம்பத்திக்காக இப்படி செய்கிறாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. 

பின் வீட்டில் இருந்தவர்களுக்கு தண்டனை கொடுத்தார் ராணி. ரித்விகாவை அழைத்து நடனமாட உத்தரவிட்டார் ஐஸ். அதற்கு அவரே தாளமும் போட்டார். ரித்விகா, "ஆல் இன்  ஆல் அழகுராஜா" காஜல் அகர்வால் போல நடனமாடினார். அவர் ஆடியதை பார்க்கும் போது  ராணியை கலாயக்கிறாரோ என்று தோன்றியது. பின் இசையை நிறுத்திவிட்டு பாட்டு இல்லாம ஆடு என்றார் ராணி. அதற்கும் சரி என்று ஆடினார் ரித்விகா. 

இந்த  டாஸ்க் முடியுற வரைக்கும் கண்ணீரை எல்லாம் நான் பார்க்க கூடாது என்றார் ஐஸ்வர்யா. மற்றவர்கள் அழுவது அவருக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கலாம். 

ஐஸ்வர்யாவோ பொருப்பாளர்களோ பார்க்காத சமயத்தில் ராணியின் போஸ்டர்களை கிழித்து போட்டார் ஷாரிக். இதை அவர் ஐஸ்வர்யா முன் செய்திருந்தாலோ அல்லது பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இது போன்று செய்திருந்தாலோ சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுக்கட்டி புரட்சி ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் இவர்கள் அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்கள். 

ராணியின் அறையில் மூவரும் பேசிக்கொண்டு இருந்தனர். மும்தாஜ் தனது கையில் கத்தி வைத்திருக்கிறார். அடுத்த முறை டாஸ்க் கொடுக்கும் போது பார்த்துக்கொடுங்கள் என்று ஆலோசனை கொடுத்தார் ஜனனி. உடனே வீட்டில் இருக்கும் அனைத்து கத்தியையும் கொண்டு வந்து விடுங்கள் என்றார் ராணி. ஆனால் தொடர்ந்து தனது மோசமான ஆட்சியை தொடர்வதில் உறதியாக இருந்தார். 

ராணியின் கட்டளையை போலவே ஜனனி வீட்டில் இருந்த கத்திகளை எல்லாம் எடுத்தார். ஆனால் மும்தாஜ் தன்னிடம் இருந்த கத்தியை கொடுக்க முன்வரவில்லை. "நாங்க ஒன்னும் பண்ண முடியாது, அவ இஷ்டத்துக்கு பண்ற" என்று விளக்கமளித்தார் ஜனனி. அதற்கு, "நீங்க தான் ஆலோசகர், நீங்க சொன்னா அவங்க கேட்டு தான் ஆகணும்" என்று பதில் அளித்தார் மும்தாஜ். 

இதனை டேனியிடம் ஜனனி கூற, "இப்படியெல்லாம் டிராமா பண்ணிட்டே இருந்தா, அவங்கல அறுத்துக்க சொல்லு" என்றார் டேனி. இவர்கள் செய்யும் டிராமவுக்கு மும்தாஜ் எவ்வளவோ தேவலாம். 
 
மும்தாஜ் ஏதாவது தவறான முடிவு எடுத்துவிடுவாரோ என்ற பயம் ஐஸ்வர்யாவிடம் இருந்தது. அவரே மும்தாஜிடம் சென்று, "நீங்க என் டாஸ்க்ல குறுக்கிடுறீங்க" என்றார். மும்தாஜ் தன்னிடம் இருக்கும் கத்தியை தருவதாக இல்லை. 

சும்மா இருந்த சென்றாயனின் ஆங்கில ஆர்வத்தை தட்டி எழுப்பி, "இப்போ யாரு வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆங்கிலத்தில் திட்டிக் கொள்ளலாம்" என்று அறிவித்தார் ஐஸ்வர்யா. இந்த திட்டத்தில் மாட்டிக்கொண்ட சென்றாயன், தனக்கு தெரிந்த வார்த்தைகளை சொல்லி ராணியையே திட்டினார். ராணியை திட்டினால் தண்டனை என அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டது. 

பாலாஜி தலையில் ஐஸ்வர்யா குப்பை கொட்டியதில் ஜனனிக்கும் டேனிக்கும் உடன்பாடு இல்லையாம். பேசிக்கொண்டு இருந்தார்கள். இவர்கள் நினைத்திருந்தால் பிரச்னை அநத அளவுக்கு செல்லாமல் தடுத்திருக்கலாம். ஐஸ்வர்யா அப்படி செய்யும் போது கூட தடுக்க வந்த மகத்தை டேனி தடுத்தார். 

பொதுமக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை கூட ராணி தானே முடிவு செய்வார். நேற்று சென்றாயன் சப்பாத்தி மற்றும் சொரக்காய் பொறியல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ராணியின் சிலையை உடைத்துவிடுவேன் என்று கூறிய ஷாரிக், அந்த சிலையின் பக்கத்திலேயே அமர்ந்து விட வேண்டும் என்று கூறினார் ராணி.  ராணி படுக்க செல்வதற்கு முன்பு ரித்விகா அவருக்கு பாடி மசாஜ் செய்ய வேண்டும், ராணி சாப்பிடும் போது  அவரை எண்டர்டெயின் செய்யும் பொறுப்பு பொன்னம்பலத்திற்கு கொடுக்கப்பட்டது. 

பொதுமக்களுக்கு சென்றாயன் சப்பாத்தி தயார் செய்து கொண்டு இருந்தார். இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்திருந்தால் அந்த மாவில் தோசை ஊற்றி இருக்கலாம். செய்யத்தெரியாமல் மாவுடன் சண்டைப்போட்டுக்கொண்டு இருந்தார் சென்றாயன். இதனை பார்த்து டேனியும், ரித்விகாவும் சிரித்துக்கொண்டு இருக்க மும்தாஜ், "இதை தான் நாம சாப்பிட போறோமா" என்பது போல பார்த்துவிட்டு சென்றார். 

மும்தாஜ் கத்தியை வைத்துக்கொண்டு இருப்பதால் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டர் ஐஸ்வர்யா. சிறை அசுத்தமாக இருப்பதால் உட்கார மாட்டேன், நின்றுகொள்கிறேன் என்றார் மும்தாஜ். இருக்க பிரச்னை இந்த பிரச்னை வேற.

பாலாஜி இந்த டாஸ்க் தொடங்கியதில் இருந்து சாப்பிடவே இல்லை என்பதால் அவரை சாப்பிட வைக்க திட்டம் தீட்டிக்கொண்டு இருந்தார்க்ள. சாப்பிட வைக்க அவர்கள் போடும் திட்டம்கூட வில்லங்கமாக தான் இருந்தது. பாலாஜிக்கு மகத் வலுக்கட்டாயமாக ஊட்டிவிட வேண்டுமாம். எப்படியாவது அவரை சாப்பிட வைக்க வேண்டும் என்பது தான் டாஸ்க். மகத் முயற்சித்தும பாலாஜி சாப்பிடவில்லை. பின்னர் இதுகுறித்து ராணியிடம் கூறினார் மகத். உதராணத்துக்காக பாலாஜிக்கு ஊட்டியும் விட்டார். ஆனால் பாலாஜி அதனை துப்பிவிட்டு படுத்துக்கொண்டார். அவரை தூங்கவிடாமல் அவர் அருகில் சென்று கரண்டியால் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. 

இரவில் ராணியும் அவருடன் இருக்கும் அதிகாரிகளுக்கம்  தனியாக பெட்ரூம் வேண்டும் என்ற பிரச்னை கிளம்பியது. அதனை அப்படியே பேசி தீர்த்தார்கள். சிறையில் இருந்த மும்தாஜின் உடல்நிலை கருதி அவர் இரவில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

முன்னதாக கூறியது போல லைட்டை ஆஃப் செய்த உடனேயே பாலாஜி தூங்காமல் அமர்ந்தார். அவரிடம் ரூல்ஸ் பற்றி டேனி கூறினார். எனக்கு ரூல்ஸ் தெரியாது என்று விளக்கினார் பாலாஜி. 

தான் ஏன் அப்படி செய்தேன் என்பதற்கு டேனி மற்றும் ஜனனியிடம் விளக்கம் அளித்துக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. ஒவ்வொரு முறையும், ஷாரிக்கின் குடும்பத்தை பெரிதாக வைத்து பேசுபவர்கள் தனது குடும்பத்தை பற்றி யோசிப்பதில்லை. அவர் குடும்பம் அவங்களுக்கு முக்கியம் என்றால் என் குடும்பம் எனக்கு முக்கியம் என பேசிக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. அப்போது கொஞ்சம் அழவும் செய்தார். அவரை சமாதானம் செய்தனர் ஜனனியும் டேனியும். அவர்கள் பேசிக்கொண்டு இருந்த போது, குப்பை கொட்டும் டாஸ்க் பிக்பாஸ் தான் கொடுத்தாக நம்பிக்கொண்டு இருந்ததாக கூறினார்கள். 

ஐஸ்வர்யா இந்த விஷயத்தில் பயங்கர குழப்பத்தில் இருக்கிறார். அவர்கள் பேசியதற்கெல்லாம் பழிவாங்கிவிட வேண்டும் என்பது மட்டும்தான் அவர் மனதில் இருக்கிறது. அவரிடம் சென்று, இப்படி செய்தால் உன் பேரு தான் கெடும் என்று ஆலோசனை கூற சரியான ஆள் அருகில் இல்லை. அவர் பக்கம் இருப்பது டேனியும், ஜனனியும். இரவில் யாருக்கும் தெரியாமல் பாலாஜிக்கு உணவு எடுத்து சென்றார் சென்றாயன். நண்பேண்டா!

அடுத்த நாள் காலையில் அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ பாடலோடு தொடங்கியது. அந்த பாடலின் முழு அர்த்தம் போட்டியாளர்களுக்கு புரிந்திருக்கும். ஐஸ்வர்யாவின் ஆட்டம் முடியும் வரை ஒத்தி போக தான் வேண்டும். காலையில் பாட்டு முடிந்தும் தூங்கி கொண்டு இருந்த சென்றாயன் மற்றும் பாலாஜியின் மீது தண்ணீரை ஊற்ற ஆயத்தமானார் ராணி. டேனி தான் ஊற்ற வேண்டும் என்றதும், ராணியிடம் இருந்து அவர் தப்பித்து சென்றது அப்பட்டமாக தெரிந்தது. 

காலையிலேயே வீட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய வேலைகள் பிரிக்கப்பட்டது. பொது மக்கள் அனைவரும் வெயிலில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும் என்ற உத்தரவும் அதிரடியாக போடப்பட்டது. 

பெட்ரூமில் இருந்த பாலாஜியும்,சென்றாயனும் பேசிக்கொண்டு இருந்தனர். டாஸ்க்க டாஸ்க்கா தான் விளையாடனும் என்று பாலாஜி பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் நான் நைட்டு சாப்பிட்டத்தை வெளியே சொல்லாத என்றும் கேட்டுக்கொண்டார். நான் அப்படி எல்லாம் செய்வேனா என அலுத்துக்கொண்டார் சென்றாயன். 

பின் மார்னிங் டிரில் கொடுக்கப்பட்டது. ராணி மகா ராணி பாடலுக்கு பிறகு, சிரிப்பு வைத்தியத்தை தொடங்கினார்கள். போட்டியாளர்கள் சிரிப்பதை விட ராணி அதிகமாக சிரித்துக்கொண்டு இருந்தார். 

டீ குடித்தவாரு நடந்து கொண்டு இருந்த சென்றாயனிடம் சென்று டீயை பிடிங்கி ஊற்றிவிட்டு வந்தார் ராணி. சாப்பிட்டு இருக்கிறது எப்படி தூக்கி போடுவீங்க என டென்ஷன் ஆனார் சென்றாயன். ஐஸ்வர்யாவுக்கும் சென்றாயனுக்கு நாய், பேய், எருமை என நீண்ட நேர சண்டை நடந்து. நாய் என்று ஐஸ்வர்யா கூறியதும் அடிக்கவே சென்று விட்டார் சென்றாயன். பின் கோபத்தை கட்டுப்படுத்தினார். ஆனால் ஐஸ்வர்யா அவர் பின்னாலேயே சுற்றி சுற்றி, "என்ன பண்ண போற காலா... இப்போ என்ன பண்ண போற" என்பது போல கேட்டுக்கொண்டுஇருந்தார். 

சில நிமிடங்களுக்கு தொடர்ந்த அந்த சீனை பார்க்க நமக்கும் கடுப்பாக தான் இருந்தது. 

இதற்கு தண்டனையாக இனி சென்றாயனை லூசு என்று தான் அழைக்க வேண்டும் என்று கட்டளையிட்டார் ராணி. ஒரு பெரிய மனுஷன இப்படியா பண்ணுவாங்க, நான் வீட்டுக்கு போறேன் என கத்தினார் சென்றாயன். பின் மற்றவர்கள் எடுத்துக் கூற அதற்கு பதிலாக வேறு தண்டனையை ஏற்றுக்கொள்வதாக கூறினார் சென்றாயன் .

அவர் தலையில் ஷாம்பூ மற்றும் குப்பை சேர்த்த தண்ணீரை ஊற்ற வேண்டும் என்ற தண்டனை கொடுக்கப்பட்டது. முடி தான் என் வாழ்க்கையே, தலையில் படாமல் தண்ணீரை ஊற்ற வேண்டும் என்ற சென்றாயனின் வேண்டுகோளுக்கு பின் தண்டனை வழங்கப்பட்டது. 

இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையேயும் லிவிங் ரூமில் படுத்து தூங்கினார் மகத். உடனே நாய் சத்தம் கேட்டது. அது போதாது என்று ராணியும் தண்டனை கொடுத்தார். வெயிலில் சென்று மகத் முட்டி போட வேண்டும். 24 மணி நேரம் இந்த டாஸ்க் தொடரும் என்றார்கள். பின்னர் அவர் ஓவராக பேசியதால் சிறையில் அடைத்தார்கள். ஓ... நான் வெயில்ல இருக்கிறதுனால சிறையில் போட்றீங்கலா என கேட்டுக்கொண்டே சிறை சென்றார் மகத். இந்த சம்பவத்தோடு நேற்றைய நிகழ்ச்சி முடிந்தது.

வீட்டில் நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த வைஷ்ணவி இன்று வீட்டிற்குள் நுழைவார். ஐஸ்வர்யாவின் சர்வாதிகாரம் பறிக்கப்படும்... பழி வாங்கும் படலங்கள் தொடங்கவும் வாய்பிருக்கிறது. பார்ப்போம். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close