மீண்டும் புறம் பேசும் வைஷ்ணவி - பிக் பாஸ் ப்ரோமோ 3

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2018 05:39 pm
vaishnavi-back-bits-again-big-boss-promo-3

சென்ற வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்‌ட் ஆகிவிட்டார் என்று அறிவிக்கப்பட்டு பின் தனியறைக்கு அனுப்பப்பட்ட வைஷ்ணவி, மீண்டும் இன்று வீட்டிற்குள் வருகிறார். வீட்டின் ரகசிய அறையில் இருந்தபடி, ரூம் மேட்ஸ் செயல்பாடுகள், பேசுவது உள்ளிட்டவற்றை வைஷ்ணவி பார்த்து வந்தார். இந்நிலையில் வீட்டிற்க்குள் வந்த வைஷ்ணவி ரூம் மேட்ஸிடம் புறம் பேசாதீர்கள் என்று அறிவுரை கொடுப்பதை "தெரிஞ்சிடுச்சா எல்லாம் தெரிஞ்சிடுச்சா" என்ற பிக் பாஸ் ப்ரோமோவில் பார்க்கலாம்.


வெளியிலிருந்து பார்க்கும் போது ஒருவரை பற்றி ஒருவர் புறம் பேசுவது அசிங்கமாக இருக்கு என்றும், பிக் பாஸ் வீட்டில் எல்லோரும் யோசித்து பேச வேண்டும் என்று கூறுகிறார் வைஷ்ணவி. புறம் பேசகூடாது என்று சொல்லி நீங்களே ஏன் அப்படி பேசினீர்கள் என்று ஐஸ்வர்யா அதற்க்கு பதிலடி கொடுக்கிறார். பின்பு மகத்திடம் அவர் அதிகமாக எமொஷினால் ஆகுவதை நிறுத்தும் படி கூறுகிறார் வைஷ்ணவி. மகத் மற்றும் யாஷிகா நடத்தும் ட்ராமாவினால் அவர்கள் பெயரை அவர்களே கெடுத்து கொள்வதாகவும் இந்த பிக் பாஸ் ப்ரோமோவில் கூறியுள்ளார் வைஷ்ணவி.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close