பிக்பாஸ் வீட்டில் ஆர்யா, டிடி: பிரோமோ 2

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2018 01:45 pm
biggboss-promo-2

பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று கஜினிகாந்த் படக்குழுவினர் செல்கின்றனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த நாட்களில் தொடர் சண்டைகள், கோபங்களை மட்டுமே பார்த்தோம். இன்று போட்டியாளர்களுக்கும், நமக்கும் ஓய்வு கொடுக்கும் வகையில் பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளிகள் செல்கின்றனர். 

இன்று வெளியாகும் கஜினிகாந்த் படக்குழு இன்று பிக்பாஸ் வீட்டிற்கு செல்வது போன்ற காட்சிகள் பிரோமோவில் காட்டப்படுகின்றன. ஆர்யா, சதீஷ், தொகுப்பாளினி டிடி மற்றும் அப்படத்தின் இயக்குநர் ஆகியோர் வீட்டிற்கு செல்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குறித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருபவர் நடிகர் சதீஷ். இன்று அவர் வீட்டிற்குள் செல்வதால் ரகளையாக இருக்கும் என்று எதிர்பார்கலாம். அது போலவே வீட்டிற்கு சென்றதும் ஐஸ்வர்யாவை அடிக்க சென்ற சென்றாயன் குறித்து பேசுகிறார்.

டிடி இனி உங்க கூட தான் இருப்பார் என்று போட்டியாளர்களிடம் கூறுகிறார் ஆர்யா. ஆள விடுங்க என்பது போல முகத்தை வைத்துகொள்கிறார் டிடி. இவர்கள் வருகையால் கடந்த நாட்களின் பரபரப்பு உப்புச்சப்பு இல்லாமல் போய்விடும் என்று தெரிகிறது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close