ஒன்னு மும்தாஜ் இருக்கணும்; இல்ல நான் இருக்கணும்: பிக்பாஸ் பிரோமோ 3

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2018 02:51 pm
biggboss-promo-3

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரச்னையை தூண்டிவிடுவதாக மும்தாஜை திட்டிக்கொண்டு இருக்கிறார் ஐஸ்வர்யா.

கடந்த ஒரு வாரம் நடந்த களேபரங்களை தொடர்ந்து வீட்டை கலர்ஃபுல்லாக்க கஜினிகாந்த் படக்குழு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்கின்றனர். நடிகர் ஆர்யா, டிடி, சதீஷ் மற்றும் கஜினிகாந்த் பட இயக்குநர் வருகையால் பிக்பாஸ் போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கும் அதே வேலையில் புதிய பிரச்னை ஒன்று தொடங்குகிறது. 

வீட்டிற்கு வந்துள்ள சதீஷ், பாலாஜி மீது குப்பைக்கொட்டப்பட்ட சம்பவம் குறித்து கேட்கிறார். படுக்கையறையில் இருக்கும் ஐஸ்வர்யா, "மும்தாஜ் வந்து வந்து பிரச்னையை தூண்டி விடுகிறார். அவர் மீதா குப்பையை கொட்டினேன். அவருக்கு என்ன" என்று பேசிக்கொண்டு இருக்கிறார். 

பின்னர், "வெளிய போன உனக்கு அவ்வளவு பேரு இருக்கு" என்று சென்றாயன் கூறுகிறார். உடனே, நான் இந்த வீட்டை விட்டு ஏன் போகனும் என்று மைக்கில் கேட்கிறார் ஐஸ்வர்யா. அவங்களுக்காக நீ ஏன் வீட்டை விட்டு போகனும் என்று கத்துகிறார் யாஷிக்கா. என்ன ஆனாலும் பிக்பாஸ் யாரையும் வீட்டை விட்டு அனுப்ப போவதில்லை... 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close