#BiggBoss Day 47: ஐஸ்வர்யா பண்ணதுல எந்த தப்பும் இல்லையே!

  Newstm News Desk   | Last Modified : 04 Aug, 2018 12:36 pm

what-happend-in-biggboss-day-47

4 நாட்கள் நடந்த போராட்டத்திற்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. வைஷ்ணவி மீண்டும் வந்துள்ளார். மீண்டும் புறம் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். ஐஸ்வர்யா மீது எந்த தவறும் இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு போட்டியாளர்கள் சென்றுவிட்டனர். உண்மையில் ஐஸ்வர்யா மீது எந்த தவறும் இல்லையா?

47ம் நாள் என்ன நடந்தது?

இன்னும் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்திக்கொண்டு தான் இருந்தார் பிக்பாஸ். ஐஸ்வர்யாவும் நான் சரியாகி விட்டேன் என்று விளக்கமளித்துக்கொண்டு தான் இருந்தார். ஆனால் அதற்கு முன் அவர் அழுத காட்சிகளால் பிக்பாஸ் மிரண்டு போயிருக்க  கூடும். அதன் வெளிபாடாக தான் இந்த நீண்ட நேர சமதானம்.

ஒரு பக்கம் கன்ஃபெஷன் ரூமில் இது நடந்து கொண்டு இருக்க இன்னொரு பக்கம் பொன்னபம்லத்தின் வீர செயல் குறித்து பேசிக்கொண்டு இருந்தனர் போட்டியாளர்கள். நீங்க பண்ணது தப்பே இல்ல, மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும் என்று தான் ஐஸ்வர்யாவும் அப்படி செய்தார் என்று ஆலோசகர் பொறுப்பில் இருந்து இன்னும் வெளியே வராத ஜனனி பேசிக்கொண்டு இருந்தார். தொடர்ந்து கையில பவர் இருந்து டக்குனு அந்த பிம்பம் உடைஞ்சா இப்படி தான் ஆகும்... பின்னர் சரியாகிவிடும் , என்று கூறிக்கொண்டு இருந்தனர் மும்தாஜும் மகத்தும்.

முதல் வாரத்தில் இருந்து பிக்பாஸின் செல்ல பிள்ளையாக இருக்கும் ஜனனி, மைக்குடன் ஐஸ்வர்யாவை தண்ணீரில் தள்ளிவிட்டது குறித்து பேசிக்கொண்டு இருந்தார். “ அப்போ எங்க துணி எல்லாம் ஓசிலயா தந்தாங்க” என்று சரியான கேள்வியை கேட்டார் பொன்னம்பலம். ஒரு மைக்கின் விலை 80 ஆயிரம் ரூபாய் அத போய் தண்ணீல போட்டுட்டீங்க… மைக்க கழட்டிட்டு தள்ளி விட்டு இருக்கலாம் என்று மீண்டும் பிக்பாஸ் பக்கமே பேசினார் ஜனனி. சட்டென கடுப்பான பொன்னம்பலம், “ஆமா, வெத்தள பாக்கு வெச்சு தள்ளிவிடவா” என்றார்.
நடுவில், “என் பெர்யூம் ஒரு லட்சம்” என்று அனத்திக் கொண்டு இருந்தார் யாஷிக்கா.

இப்போதைக்கு போய் பிரெஷ் ஆகுங்கோ, டாஸ்க் பற்றி பின்னர்  அறிவிக்கப்படும் என்று ஐஸ்வர்யாவை அனுப்பி வைத்தார். வெளியே வந்ததும் ராணியம்மா திரும்பவும் ஆட்டத்தை தொடங்கி விடுவாரோ என்ற பதற்றத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தனர் போட்டியாளர்கள். ஐஸ்வர்யா பாத்ரூமிற்குள் வேகமாக செல்ல, பேபி என்று கூறிக்கொண்டே பின்னாள் சென்றார் மும்தாஜ். ஆனால் அதற்கு ஐஸ்வர்யா எந்த பதிலும் அளிக்கவில்லை. உள்ளே இருந்து அழுகுரல் மட்டும் கேட்டது. பின்னர் வெளியே வந்து அமர்ந்த ஐஸ்வர்யாவை பார்க்கும் போது கடந்த 4 நாட்களாக பார்த்தவர் தானா? என்ற கேள்வி எழுந்தது. இன்னும் சாந்தம் இல்லாத முகம் தான், ஆனால் முன்னர் இருந்த ஆக்ரோஷத்திற்கு பதிலாக கண்களில் கண்ணீர் தேங்கிய படி இருந்தார். இந்த வாரம் டாஸ்க்கை சரியாக செய்ததற்காக அனைவரையும் பாராட்டினார் பிக்பாஸ்.

பின் ஐஸ்வர்யாவுக்கு இம்யூனிட்டி பவர் கொடுக்கப்பட்டது. அதனால் அவர் அடுத்த வார எவிக்ஷன் பிராசசில் இருக்க மாட்டார். அடுத்து இந்த டாஸ்க்கை சரியாக செய்தவர்கள் என ரித்விகா மற்றும் ஷாரிக்கை தேர்வு செய்தார் ஐஸ்வர்யா. ரித்விகாவை தேர்வு செய்தது சரியான முடிவு. இந்த டாஸ்க்கின் போது பிரச்னைகள் இன்னும் அதிகமாகாமல் இருக்க ரித்விகாவின் பொறுமையே பல இடங்களில் காரணமாக இருந்தது.

லக்சரி பட்ஜெட்டுக்காக தான் இப்படி செய்தேன். சொந்த காரணங்கள் எல்லாம் இல்லை என்றார் ஐஸ்வர்யா. அப்போது அவர் லிவிங் ரூமில் கத்திய காட்சிகள் கண் முன் வந்து போனது. இந்த முகம் தானா அதுவும்!

பாலாஜிக்கு வழங்கப்பட்ட தண்டனை யார் சொல்லி செய்தாய் என்ற கேள்வியை எழுப்பினார் மும்தாஜ். இந்த டாஸ்கின் தன்மை கருதி நானே கொடுத்த தண்டனை என்று 'ஞெ' என விளக்கம் அளித்தார் ஐஸ்வர்யா.

நான் உன்ன சரியான போட்டியாளர் இல்லனு நினைச்சேன். ஆனா, நான் நினைச்சது தப்புனு நிரூபிச்சிட்ட. இந்த டாஸ்க்கை நீ சரியா தான் செய்திருக்க. வருத்தப்படாத, என்று ஐஸ்வர்யாவிடம் கூறினார் ரித்விகா. ஐஸ்வர்யா மீதான இந்த அபிப்ராயம் பலருக்கும் மாறி இருக்கும்.

பாலாஜிக்கு கொடுத்த தண்டனை மட்டும் பண்ணி இருக்கலனா, நல்லா இருந்திருக்கும். அவர் வெரிய மனுஷன்ல, லைஃப் லாங் இது மனசுலையே இருக்கும் என்று கூறினார் ஜனனி. இதுப்பற்றி கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அவருக்கு வாழ்க்கை முழுக்க அசிங்கம்னா எனக்கும் தானே. அவர் என் குடும்பத்த பத்தி பேசினார். ஷாரிக் மேல எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல. அந்த பையன் குடும்பம் பெருசுனு சொல்றாங்க… என் குடும்பத்த  நான் காமிக்கவா என புலம்பினார் ஐஸ்வர்யா. அவருக்கு ஆதரவு தெரிவித்தார்  டேனி.

இன்னொரு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதனை விட மோசமாக எல்லாம் நடத்தி இருக்கிறார்கள் என்று ஐஸ்வர்யா விளக்கம் அளித்தார். இந்த உரையாடல் நடந்து கொண்டு இருக்க,இதனை தனி அறையில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தார் வைஷ்ணவி. அவரை வீட்டிற்குள் செல்ல அனுமதியளித்தார் பிக்பாஸ். கன்ஃபெஷன் அறையில் கண்ணை கட்டி அவரை அமர வைத்திருந்தனர்(வெவரமான ஆட்கள் தான்). பார்த்தவரை  வீட்டில் இருப்பவர்களை நேர்மை அடிப்படையில் பட்டியலிட வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

போட்டியாளர்கள் அனைவரும் கார்டன் ஏரியாவில் இருக்க, வைஷ்ணவியை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் பொய் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தினர். பக்கத்தில் வந்தவர்களை, போங்க போங்க என்று அனுப்பினார் வைஷ்ணவி. பின்னர் தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை விளக்கி, அதன் படி பட்டியலிட்டார். இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக டேனி முதல் இடத்தில் இருந்தார். டேனிக்கும் இது அதிர்ச்சிதான். பின்னர் அடுத்தடுத்த இடத்தில் பொன்னம்பலம், ரித்விகா, மும்தாஜ்,  ஜனனி, மகத், பாலாஜி, ஐஸ்வர்யா, சென்றாயன், யாஷிக்கா மற்றும் கடைசி இடத்தில் ஷாரிக். டாஸ்க் முடிந்ததும் அனைவரையும் கட்டியணைத்துக்கொண்டார் வைஷ்ணவி.

இந்த வாரத்திற்கான லக்சரி  பொருட்களுக்கான புள்ளிகளில் பாலாஜியின் காரணமாக 200 குறைக்கப்பட்டது. மீதம் இருந்ததற்கு பொருட்களை வாங்கினர். இதற்காக தானே கடந்த 4 நாட்கள் நடந்தவற்றை பொறுத்துக்கொண்டு இருந்தனர்.

டிவில பார்க்கும் போது எல்லாரும் நடிக்கிற மாதிரி தான் இருக்கு என்று தனது அனுபவம் குறித்து கூறிக்கொண்டு இருந்தார் வைஷ்ணவி. அப்போது, நாம பண்ணதே அப்படி இருக்குனா, வைஷ்ணவி பண்ணத பார்க்க எப்படி இருந்திருக்கும் என்று டைமிங்கில் அடித்தார் சென்றாயன். இதைப்பற்றியே பெட்ரூமில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அவர் ஸ்டைலில் நீளமாக கூறிய விளக்கம், நம் பொருமையை சோதித்து.

பின்னர் தலைவியால் வீட்டில் உள்ள கேமராக்கள் சில சேதம் அடைந்துவிட்டது என்பதால் அவர், அனைத்து கேமராக்களுக்கும் சாரி கேமரா என்று சொல்லும் தண்டனை கொடுக்கப்பட்டது. இதனை கேமரா பின் இருப்பவர் தான் யோசித்திருக்க கூடும்.

இதனைபோலவே டேனி மற்றும் ஐஸ்வர்யாவை தாக்கியதால் பொன்னம்பலம் வீட்டில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டார். அவருடன் யாரும் பேசக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது .

பாலாஜியிடம் ஐஸ்வர்யா மன்னிப்பு கேட்டார். இது டாஸ்க்கிற்காக மட்டும்தான் என்று அவர் கூறியது பொய் தான் என்று பாலாஜிக்கும் தெரியும். நீங்க எப்போதும் போல ஜாலியாக இருங்கள். அதான் என்விருப்பம் என்று ஐஸ்வர்யா கேட்டுக்கொண்டார். பாலாஜி அதற்கு சரியாக பதில் அளிக்க வில்லை. ஐஸ்வர்யா சென்ற பிறகு தனியாக அழுதுக்கொண்டு இருந்த பாலாஜியை ரித்விகாவும், மகத்தும் சமாதானப்படுத்தினர். அதோடு அன்றைய நாள் முடிந்தது.

47வது நாள் தொடக்கத்தில் அப்படி போடு பாடல் ஒலிக்கப்பட்டது. ஐஸ்வர்யாவின் நடனத்தையும் பார்க்க முடிந்தது. பாலாஜி சாப்பிட்டால் தான் மற்றவர்கள் சாப்பிட முடியும் என்று பிக்பாஸ் கூறிவிட்டதாக டேனி கூறினார். அவரை சாப்பிட வைக்க டேனி போட்ட திட்டம் இது. அதன் படி பாலாஜியும் சாப்பிட்டார். அதனை கைத்தட்டி கொண்டாடினர் போட்டியாளர்கள்.

பின்னர் ஐஸ்வர்யாவின் தலைவி  பொறுப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அடுத்ததலைவருக்கான போட்டியில் ரித்விகா மற்றும் ஷாரிக் மட்டுமே பங்குபெற முடியும். அவர்களுக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதற்கு ஐஸ்வர்யா தான் நடுவர். அந்த டாஸ்க்கில் ஷாரிக் வெற்றி பெற்று தலைவரானார்.

உடனே அணியை பிரிக்க வேண்டும் என்று அறிவிப்பு வந்தது. கிட்சன் அணியில் மும்தாஜ் மற்றும் சென்றாயன் நிச்சயமாக இருக்க வேண்டும் என்றார்கள். சென்றாயன் தனக்கு ரெஸ்ட் வேணும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் ஐஸ்வர்யா அணியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சரியா சமைக்க வராது என்று மும்தாஜ் கூறினார். உடனே, அதை எப்படி நீங்க சொல்லலாம். நீங்க சமைக்கிறது கூட தான் நல்லா இல்ல என்று அதிரடியாக பேசினார் ஐஸ்வர்யா. இனி அவர் பேசும் அனைத்தும் அப்படி தான் இருக்கும்.

அப்போது, இசை ஒலிக்க கஜினிகாந்த் படக்குழுவில் இருந்து ஆர்யா, இயக்குநர், சதீஷ் மற்றும் அவர்களுடன் டிடியும் வந்திருந்தார். வழக்கம்  போல போட்டியாளர்கள் உற்சாகமடைந்தனர்.

வீட்டிற்கு வந்தவர்களுக்கு போட்டியாளர்கள் சிலர் நண்பர்கள் என்பதால் கலகலப்பாக இருந்தது. சதீஷ் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருபவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஐஸ்வர்யாவின் அட்ராஸிட்டி பற்றி அவரின் ட்விட்டர் பதிவுகள் எல்லாம் வைரலானது. டிடி எங்க டீம் இல்ல… அவங்க வைல்ட்கார்ட் என்ட்ரி என்று கூறினார் ஆர்யா. அய்யோ, இல்லைங்க என்று மறுத்தார் டிடி.

மகத்தின் கேர்ள் பிரேண்ட்டை பற்றி கூறி கலாயத்தார்கள் ஆர்யாவும், சதீஷும். பாலாஜி மீது குப்பை கொட்டப்பட்டது பற்றி கேட்டார் சதீஷ். அதற்கான காரணத்தை ஐஸ்வர்யா கூற, என்ன இருந்தாலும்… என்று இழுத்தார் சதீஷ்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன் மகத்திடம் பேசியபோது, இந்த நிகழ்ச்சி குறித்து மறைத்தது பற்றி கூறிக்கொண்டு இருந்தார் சதீஷ். பின்னர் படத்தை பற்றி பேசினர்கள். பிற்பாடு பிக்பாஸ் அவர்களுக்கு டாடா சொல்லி வெளியே போக சொன்னார். அப்போது அவர் டிடியின் பெயரை விட்டுவிட. உண்மையில் அவர் வைலட்கார்ட் என்ட்ரி தானோ என்று நினைத்தனர் போட்டியாளர்கள். ஆளை விடுங்கள் என்று படக்குழுவுடன் அவரும் வெளியேறினார்.

4 நாட்கள் நடந்த அட்டகாசங்கள் அனைத்தும் தற்போது அடங்கி இருக்கிறது. ஐஸ்வர்யா மீது யாருக்கும் கோபம் இல்லாதது போல தான் இருக்கின்றனர். வெறும் டாஸ்க் தான் அதில் எந்த தவறும்இல்லை என்பது போல தான் உள்ளது போட்டியாளர்களின் நடவடிக்கை. உண்மையில் இதெல்லாம் சரியா, தவறா என்பதை பற்றி இன்ற நாட்டாமை கூறுவார். கமல் முன் பெரிய சவால் இருக்கிறது. எப்படி சமாளிக்க போகிறார்?

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.