பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஷாரிக்!

  Newstm Desk   | Last Modified : 05 Aug, 2018 09:59 pm
shariq-evicted-from-bigg-boss

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஷாரிக் வெளியேறி உள்ளார். ஐஸ்வர்யாவின் அன்பு, அழுகையைத் தாண்டி வீட்டுக்குப் புறப்பட்டார் ஷாரிக். 

இன்றைய பிக்காஸ் வீட்டில் எலிமினேஷன் மிக விரைவாக நடந்தது. இந்த வாரம் மும்தாஜ், ஷாரிக், மகத், பாலாஜி, பொன்னம்பலம் மற்றும் ரித்விகா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். இதில் ரித்விகா சேஃப் என்று நேற்றே கமல் அறிவித்து விட்டார். அதனால், யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஷாரிக் வெளியேறுகிறார் என்று நியூஸ்டிஎம் செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால், ஐஸ்வர்யாவை பிக்பாஸ் வெளியேற்றுகிறார் என்று எல்லாம் செய்திகள் பரவின. இந்தநிலையில் இன்றைய நிகழ்ச்சியில், புலி வருது... புலி வருது என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு புலி வரவே இல்லை. ஆனால், இன்றைக்கு புலி வந்துவிட்டது என்று கமல் அறிவித்தார்... உடனடியாக ஷாரிக்கை மேடைக்கு வரும்படி அழைத்தார். இதை வீட்டினர் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஐஸ்வர்யா, யாஷிகா, பாலாஜி, மகத், ஜனனி என அனைவரும் பிக்பாஸின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நான் வேண்டுமானால் வெளியேறுகிறேன்... அதற்கு பதில் ஷாரிக்கை அனுமதியுங்கள் என்று கெஞ்சினார் பாலாஜி. ஆனால், நீங்கள் பெருந்தன்மையாக இருக்கலாம்... மக்கள் முடிவை மாற்ற முடியாது என்றார் கமல். மேலும், ஷாரிக்குக்கு வெளியே வாய்ப்புகள் இருக்கலாம். அதை ஏன் தடுக்கின்றீர்கள்... நல்ல நடிகனாக வரட்டுமே என்று சமாதானம் செய்தார் கமல்.

இதனால், ஒரு வழியாக அனுப்பி வைத்தனர் பிக்பாஸ் குடும்பத்தினர். ஷாரிக்குக்கு குடும்பமே அழுகையில் வைஷ்ணவிக்கு கோபம் வந்திருக்கும்போல. போன வாரம் நான் போனபோது நீங்க அழலையே என்று மும்தாஜிடம் கேட்டார். அவருடைய ஒவ்வொரு செயலும் அவரது எண்ணத்தை பிரதிபலிப்பதுபோலவே இருந்தது. கடந்த வாரம் அவரை தனி அறையில் அடைத்ததற்கு பதில் வீட்டுக்கே அனுப்பியிருக்கலாம். என்னதான் தனி அறையில் தங்கி நிகழ்வுகளை கவனித்திருந்தாலும் அவர் திருந்தாதது போலவே உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close