இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி சொல்லுவாங்க: பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2018 11:02 am
6-8-2018-biggboss-promo-1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷாரிக் வெளியேறியிருக்கும் நிலையில் அடுத்து யாரை நாமினேட் செய்யலாம் என்று போட்டியாளர்கள் பேசிக்கொண்டு இருக்கின்றனர். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 2வது சீசன் தற்போது தான் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. நேற்று வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஷாரிக் எவிக்டாகி வெளியேறினார். வீட்டில் இருந்து அனைவரும் அழுது அவரை அனுப்பி வைத்தனர். 

அவர் வெளியே சென்ற அடுத்த சில மணி நேரத்தில் யாரை நாமினேட் செய்யலாம் என்று திட்டம் தீட்ட தொடங்கி விட்டனர். இன்று வெளியாகி உள்ள முதல் பிரோமோவில் பாலாஜி, ரித்விகா மற்றும் ஜனனி ஆகியோர் இது குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். முதலில் ரித்விகா,  "இத்தனை வாரம் ஆகி விட்டது. இன்னும் எத்தனை நாளுக்கு தான் நம்மை போலி என்று கூறுவார்கள்" என்று கேட்கிறார்.

ரித்விகா இறுதிப்போட்டிக்கு சென்றால் நான் மகிழ்வேன் என்கிறார் ஜனனி.

யாரோ 3 பேரை குறிப்பிட்டு பேசுகிறார் பாலாஜி. "அவ இந்த வாரம் நாமினேட் ஆகி இருந்தா எவிக்டாகி இருப்பா" என்று ரித்விகா யாரையே கூறுகிறார். அனேகமாக அது ஐஸ்வர்யாவாக இருக்கக்கூடும். பின்னர் சென்றாயன் கொஞ்சம் சுயநலத்துடன் நடந்து கொள்வதாக கூறுகிறார் ரித்விகா. அதற்கு, அவர் வேலை நடக்க வேண்டும் என்றால் எந்த பக்கமும் சாய்வார் என்று கூறுகிறார் பாலாஜி.

இதெல்லாம் புறம் பேசுகிறார்கள் என்ற லிஸ்டில் வருமா?

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close