என்ன அடிச்சிருவியா நீ: பிக்பாஸ் பிரோமோ 2

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2018 01:41 pm
biggboss-promo-2-6-8

பிக்பாஸ் இரண்டாவது பிரோமோவில் பாலாஜிக்கும், மகத்துக்கும் கடுமையான வாக்குவாதம் நடக்கிறது. 

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் நடத்திய பஞ்சாயத்துக்கு பிறகு போட்டியாளர்கள் அனைவரும் மனம் மாறி இருப்பர் என்று நினைத்தால், அதெல்லாம் மாற முடியாது என்பது போல இன்றைய இரண்டாவது பிரோமோ வெளியாகி உள்ளது. 

இதில் நீதிமன்றம் போன்ற செட்டில் போட்டியாளர்கள் நிற்கின்றனர். யாஷிக்கா நீதிபதி!

குற்றவாளி கூண்டில் மும்தாஸ் நிற்க, பாலாஜி பேசத் தொடங்குகிறார். அவர், "வெளியே இருந்து கெஸ்ட் வரும் போது, தன்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்று கேட்பது முட்டாள்தனம்" என்கிறார். உடனே, "அது அவங்க இஷ்டம், நீங்க என்ன எப்படி முட்டாள் என்று கூறலாம்" என மகத் கத்த தொடங்குகிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது. 

என்னை அடிச்சிருவியா நீ என பாலாஜி கேட்கிறார். மற்ற போட்டியாளர்கள் இருவரையும் சமாதானப்படுத்திக் கொண்டு இருப்பது போல பிரோமோவில் காட்டுகின்றனர். 

கடைசியில் மகத், அழுதுக்கொண்டே பாலாஜியிடம் மன்னிப்பு கேட்க போகிறார். இதற்கேன் இவ்வளவு பில்டப்.

இதை படிச்சீங்களா: இரு துருவங்கள் - பகுதி 3 | ரஜினி Vs கமல்

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close