#Biggboss Day 49: ஷாரிக் பையன் நிஜமாகவே பாவம் தான்

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2018 12:38 pm
what-happened-in-biggboss-day-49

காரணமே இல்லாமல் நாமினேட் செய்தோம் என்று போட்டியாளர்கள் கூறிய ஷாரிக், மக்களின் ஆதரவு இன்றி நேற்று வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறிய பிறகு தான் போட்டியாளர்களுக்கு அவரை எவ்வளவு பிடிக்கும் என்பதை காட்டினார்கள். இனி பிக்பாஸ் வீட்டில் 11 பேர் மட்டுமே இருக்க போகின்றனர். ஷாரிக் வெளிறிய அடுத்த நிமிடமே அடுத்து யாரை நாமினேட் செய்யலாம் என்ற தலைப்பு தொடங்கியது. ஆக...  இனி போட்டி கடுமையாக இருக்கும்.

49வது நாள் என்ன நடந்தது?

தொடக்கமே நாம் எதிர்பார்க்காத காட்சிகளை காட்டினர். பாலாஜியின் தலையில் குப்பைகளை கொட்டிய ஐஸ்வர்யா, அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டுக்கொண்டு இருந்தார். சாதாரணமா இல்லை, நீ என் பொண்ணு மாதிரி, நீ என் அப்பா மாதிரி என்பது போல பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் உண்மையாக தங்கள் தவறுகளை உணர்ந்து இப்படி செய்தார்களா, அல்லது கடமைக்காக செய்தார்களா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது என்பதால் முதல் ஆப்ஷனை வைத்துக்கொள்வோம். 

அந்த உரையாடலின் போது, ஐஸ்வர்யாவுக்கு பாலாஜி அறிவுரை கூறினார். மேலும், இன்னைக்கு நான் வீட்டை விட்டு வெளியேறிவிட்டால்... என்னை பற்றி தவறாக நினைத்துவிடுவாயோ என்று தான் இப்போது மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினார். ஐஸ்வர்யாவும் அப்படி எல்லாம் கோபம் இல்லை என்று கூறினார். "ஆனால், என்ன ஆனாலும்... எவ்வளவு கோபம் இருந்தாலும் சாப்பிடாமல் இருக்காதீங்க" என்றும் பாலாஜியிடம் ஐஸ்வர்யா கேட்டுக்கொண்டார். இவ்வளவு பாசத்த எங்கம்மா வெச்சிருந்த என்று பாலாஜி யோசித்திருக்க கூடும். 

சனிக்கிழமை கமல் நடத்திய பஞ்சாயத்துக்கு பிறகு வீட்டில் இந்த மாற்றங்கள் எல்லாம் நடந்துள்ளது என்பதை காட்டுவதற்காகவே அந்த காட்சியை முதலில் போட்டனர். பின்னர் வழக்கம் போல கமல் வந்து, அகம் டிவி வழியாக போட்டியாளர்களிடம் பேசினார். 

போட்டியாளர்களும் வழக்கம் போல கமலின் லுக் பற்றி பேச வேண்டுமே, சென்றாயன் "யூ ஆர் லுக்கிங் குட்" என்றார். இந்த வாய்ப்பை ஏன் விடவேண்டும் என்று பஞ்சயாத்துக்கான லீடை அதில் இருந்தே எடுத்து தொடங்கினார் கமல். 

"ஐ எம் லுக்கிங் குட், யூ ஆர் குங்குங் குட்" என்றார். உடனே சென்றாயன் சப்பாத்தி சுட்டதை பற்றி பேசினார். 

இதற்கு நடுவில், ஐஸ்வர்யா -பாலாஜிக்கு இடையே நடந்த உரையாடல் குறித்தும் கமல் கேட்டார். "நீங்க ரெண்டு பேரும் பேசுறதுக்கு 'மலர்ந்தும் மலராத" என பின்னணி பாடல் போடலாம் என்று தோன்றியது. இப்படியே போனால், நல்லவங்க ஆகிடுவீங்க என்று தான் நான் வந்துவிட்டேன்" என்றார். அது தானே பிக்பாஸின் வேலை!

பின்னர் மீண்டும் சென்றாயன் சமையல் பற்றி கேட்டனர். வைஷ்ணவி தேவையே இல்லாமல் ஆஜராகி சென்றாயன் சப்பாத்தி பற்றி குறும்படம் காட்டுங்கள் என்று கேட்டார். நாங்க உங்களை விட அதிகமாக பார்த்துவிட்டோம் என்று வைஷ்ணவிக்கு பதில் அளித்தார் கமல். 

பின்னர் மும்தாஜுக்கு சென்றாயன் ஊட்டிவிட்டதை பார்க்கும் போது, 'ரொம்ப ஹைஜீனா இருந்தது' என்று கிண்டலடித்தார் கமல். அதனைபற்றி சென்றாயன் விவரிக்கும் போது மும்தாஜின் முகபாவங்கள் தவறானதாகவே தெரிந்தது. 

இந்த மாதிரி சர்வாதிகாரம் வந்தா தான் ரூல்ஸை கடைப்பிடிப்பீங்க போல, மதியம் யாரும் தூங்கவே இல்ல என்றதும், ஆமாம் சார் என்பது போல அமைதிகாத்தனர் போட்டியாளர்கள். 

பாலாஜி இந்த வாரம் வீட்டில் நடந்த விஷயங்களில் இருந்து அகன்று நின்றது குறித்து விசாரித்தார் நாட்டாமை. அதற்கு பாலாஜி நேரடியாக பதில் அளிக்காமல் ஏதேதோ சொல்ல... "உங்க மொழி வன்மையை காண்பிக்க ஒரு குறும்படம் இருக்கு" என்று கமல் கூறினார். சனிக்கிழமையே பாலாஜிக்கு குறும்படம் போட்டு மானத்தைக் கப்பல் ஏற்றினர். தற்போது மீண்டுமா என்ற அதிர்ச்சி பாலாஜியின் முகத்தில் தெரிந்தது. 

பாலாஜி பேசிய 'கெட்ட' வார்த்தைகளுக்கு பீப் போட்டு ஒரு குறும்படத்தை காட்டினர். அதில் அதிகமாக சென்றாயனிடமே அவர் அப்படி பேசியிருந்தார். படம் முடிந்ததும், இந்த ஷோல நாங்க எடிட் பண்ணிடுவோம், ஆனா வாழ்க்கையில யாரும் பண்ண முடியாது. மைண்ட் யுவர் லாங்குவேஜ் என்ற கடுமையான எச்சரிக்கையை சாஃப்டாக கூறினார் கமல். 

"உங்களுக்கு கோவம் வரலையா" என்று பாலாஜியின் மொழிவளம் குறித்து சென்றாயனிடம் கேட்கப்பட்டது. "அவர் பாசமா தான் பேசுவாரு. என் முன்னாடி அதிகம் கெட்ட வார்த்தை பேசியது இல்லை" என்றார் சென்றாயன். "முன்னாடி இல்லைங்க, உங்கள போகவிட்டு பின்னாடி தான் பேசுறாரு" என்று பிக்பாஸ் போல பேசினார் கமல். 

உடனே, "இப்படிதான் பின்னாடி பேசிட்டு இருக்கியா நீ" என்று பாலாஜியிடம் உரிமையோடு சென்றாயன் கேட்க அனைவரும் சிரித்துவிட்டனர். ஏன் சென்றாயனை மட்டும் அதிகமாக திட்டுகிறீர்கள் எனறு பாலாஜிடம் கமல் கேட்டார். அதற்கு, "அவர் வெளியே இருந்து வீட்டிற்கு யார் வந்தாலும் ஓவர் உற்சாகமாகி விடுகிறார். நம்மை போல நடிகர்கள் தான், அவர்களை பார்த்து ஏன் அப்படி உற்சாகமாக வேண்டும் என்று நான் பல முறை கேட்டிருக்கிறேன். அது மாறனும்னு தான்..." என்று வழக்கம் போல மழுப்ப முயற்சித்தார் பாலாஜி.

அதெல்லாம் செல்லாது செல்லாது என்பது போல, "நீங்க பேசுனது எல்லாம் வைத்து முழு நீளப் படமே எடுக்கலாம், நாங்க சுறுக்கி காட்டியிருக்கிறோம்" என்று கமல் கூறியதும் அடங்கினார் பாலாஜி. 

கெட்ட வார்த்தை பஞ்சாயத்துக்கு பிறகு, "ஒரே அட்வைசா இருக்கு, எனக்கே குமட்டுது" என்று கூறிவிட்டு எவிக்‌ஷன் பிராசஸை கமல் தொடங்கி வைத்தார். அப்போது போட்டியாளர்களிடம் யாரை காப்பாற்ற வேண்டும் என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, பலரும் ஷாரிக்கின் பெயரை தான் கூறினர். அதனைக்கேட்கும் போதே கமல் ஷாக்கானது தெரிந்தது. பின்னர் மும்தாஜ் மற்றும் பொன்னம்பலம் சேஃப்பாகி விட்டதாக கமல் அறிவித்தார். 

மீதம் பாலாஜி. மகத், ஷாரிக் மட்டும் இருந்தனர். ஏன் ஷாரிக்கை நாமினேட் செய்தீர்கள் என்ற கேள்வியை கமல் அவருக்கே உரிய பாணியில் சுற்றிவலைத்து கேட்டார். ஷாரிக்கை ஜனனி மற்றும் பாலாஜி ஆகியோர் நாமினேட் செய்திருந்தனர். ஜனனி, தனக்கு யாரை நாமினேட் செய்வது என்று தெரியாததால் ஷாரிக் பெயரை கூறினேன் என காரணம் கூறினார். பாலாஜியும் இதனை போலவே ஒரு காரணத்தை கூற நீங்க விளையாட்டா பண்ணத மக்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டார்கள் என்று தீர்ப்பை கமல் அறிவித்தார்.

முதலில் கமல் விளையாடுகிறார் என்று தான் போட்டியாளர்கள் நினைத்தனர். ஆனால், கமல் எவிக்‌ஷன் கார்ட்டை காட்டியதும் வீட்டில் இருந்த பலரும் அழத் தொடங்கினர். கமலுக்கும் ஷாரிக் நாமினேட் செய்யப்பட்டதும், தற்போது வெளியேறுவதும் அதிர்ச்சியாக தான் இருந்திருக்க கூடும். வெளியே வந்து அவர் பெரிய ஹீரோ ஆவார் என்று  மற்றவர்களை சமாதானப்படுத்தினார் கமல். 

இதுவரை எவிக்டாகி சென்றவர்களை விட, ஷாரிக்கின் வெளியேற்றத்திற்கு தான் ஒட்டுமொத்தமாக வீடே அழுதது. குறிப்பாக ஐஸ்வர்யாவும், மும்தாஜும் அதிகமாக அழுதனர். மும்தாஜ் அழுததை பார்த்தும், "நீங்க எனக்கு மட்டும் ஏன் அழல" என்று வைஷ்ணவி கேட்டார். அவர்கள் இருக்கும் மனநிலையில் இதற்கெல்லாம் பதில் அளிக்கும் நிலையில் இல்லை. வீட்டை விட்டு செல்வதற்கு முன்பு ஒரு டீ கிடைக்குமா என்று ஷாரிக் கேட்க, மும்தாஜும் வேகமாக சென்று டீ தயார் செய்தார். 5 நிமிஷம் தான் டைம், டீ எல்லாம் வேண்டாம் என்றார் வைஷ்ணவி. அந்த நிலையில் இப்படி எல்லாம் யோசிக்க தோன்றுமா என்ன?. பிக்பாஸின் ரூல்ஸை ஓவராக பின்பற்றுவதை பார்க்கும் போது திகட்ட தான் செய்கிறது. 

தன்னிடம் இருந்த பொருட்களை சிலருக்கு பரிசாக கொடுத்துவிட்டு, தான் பராமரித்து வந்த செடியை ஐஸ்வர்யாவுக்கு கொடுத்தார் ஷாரிக். செல்ஃபி எடுப்பதற்கு முன்பே ஐஸ்வர்யா தேம்பி தேம்பி அழ தொடங்கினார். ஷாரிக் வீட்டைவிட்டு வெளியே சென்றதும், கதவு பக்கத்திலேயே நின்று அழுதார் ஐஸ்வர்யா. ஷாரிக் பையன் பாவம் என்று பலமுறை பகடி செய்தவர் இப்படி அழுவதை பார்க்க ஆச்சரியமாக தான் இருந்தது. நீண்ட நேரம் ஷாரிக் வெளியேறியது குறித்து போட்டியாளர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர். 

ஷாரிக் மேடைக்கு வந்ததும், பார்வையாளர்கள் கைத்தட்டல் அதிகமாகவே இருந்தது.  அவரிடம் கமல் சில பல அறிவுரைகள் கொடுத்த பிறகு, ஷாரிக்கின் தாய் உமா ரியாஸ் மேடைக்கு வந்தார். அவர் பேசி முடிக்கும் போது, "என்னை வைல்ட்கார்ட் என்ட்ரியா அனுப்புங்க" என்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி பிடித்து போய் தான் அப்படி கேட்கிறார் என்று கமல் பெருமையாக சிரிக்க, "உள்ளே போய் வெச்சி செய்வேன்" என்று ஐஸ்வர்யா சொன்னது போலவே கூறினார். நீங்களுமா என்பது போல தலையில் அடித்துக்கொண்டார் கமல். 

பின்னர் ஷாரிக்கிற்காக ஸ்பெஷல் வீடியோ போடப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் ஷாரிக் பெரிதாக எதுவுமே செய்யவில்லை என்பது அந்த வீடியோவை பார்க்கும் போதே தெரிந்து கொள்ளலாம். 

பின் மற்றவர்களை போல போட்டியாளர்கள் குறித்து ஷாரிக்கிடம் கேட்கப்பட்டது. ஏற்கனவே நிறைய நேரம் ஆகிவிட்டதால் அந்த காட்சிகளை எல்லாம் கத்தரித்திருந்தனர். ஜனனி, ஐஸ்வர்யா மற்றும் மகத் பேசியதை மட்டும் காட்டினர். 

சென்ற வாரம் தலைவராக இருந்தவர் வெளியேற்றப்பட்டு உள்ளதால் அவருக்கே அடுத்து தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப் பட்டது. மீண்டும் அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்தனர். யாஷிக்காவை தலைவராக தேர்ந்தெடுத்தார் ஷாரிக்.

பின்னர் மிஸ் யூக்கள், லவ் யூக்கள் முடிந்து ஷாரிக் கிளம்பினார். 

வீட்டிற்குள் நடக்கும் காட்சிகள் காட்டப்பட்ட போது, "நான் தான் வின் பண்ணுவேன், இது ஷாரிக்கோட அசை" என ஐஸ்வர்யா கேமரா முன் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் அடுத்து யாரை எவிக்ட் செய்யலாம் என்று மகத், யாஷிக்கா, ஐஸ்வர்யா ஆகியோர் பேசிக்கொண்டு இருந்தனர். ரசம், ஜாமூன், ஜலப்பினோ என பட்டப்பெயர்கள் வைத்து பேசிக்கொண்டு இருந்தனர். 

அப்போது, "டேனி நாமினேட் ஆகாமல் எஸ்கேப் ஆகி கொண்டே இருக்கிறார்" என கூறினார் யாஷிக்கா. அப்படி பார்த்தால் யாஷிக்காவும் நாமினேட் ஆகாமல் எஸ்கேப்பாகி கொண்டு தான் இருக்கிறார். கடைசியா ரித்விகா பிறந்தநாளுக்கு கேக் அனுப்பட்டு இருந்தது. அது என்ன சென்ட்ராயன் மற்றும் ரித்விகாவுக்கு சிறிய கேக்... யாஷிகாவுக்கு மட்டும் பெரிய கேக் பிக்பாஸ்?.. போட்டியாளர்கள் அந்த கொண்டாட்டத்தில் மூழ்கினர். 

செய்வதை எல்லாம் செய்துவிட்டு, கேக் அனுப்பி சமாதானம் செய்வதே வர, வர பிக்பாஸின் வேலையாகி விட்டது!

பிக்பாஸ் 2 : றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள் I 9ம் நாள்  I

10ம் நாள்   I   11ம் நாள் I   12ம் நாள்   I  14ம் நாள்   I   15ம் நாள்   I   16ம் நாள்   I   17ம் நாள்   I   18ம் நாள்   I   19ம் நாள் I   20ம் நாள் 

 I   21ம் நாள்  I   22ம் நாள்  I   23ம் நாள்  I   24ம் நாள்  I   25ம் நாள்  I   26ம் நாள்  I   27ம் நாள்  I   28ம் நாள்  I   29ம் நாள்  I   30ம் நாள் 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close