யாஷிக்கா சொல்லும் சோம்பேறி யார்: பிக்பாஸ் பிரோமோ 3

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2018 02:32 pm
6-08-biggboss-promo-3

இந்த வாரம் தலைவியாகி இருக்கும் யாஷிக்கா, வீட்டில் இருந்து ஒருவரை நேரடியாக நாமினேட் செய்யும் உரிமையை பெற்றுள்ளார். 

நேற்றைய நிகழ்ச்சியில் ஷாரிக் வீட்டில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேறும் போது தலைவர் பொறுப்பில் இருந்ததால், அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஷாரிக்கிடம் வழங்கப்பட்டது. அவர் சற்றும் யோசிக்காமல், அடுத்த தலைவராக யாஷிக்காவை தேர்வு செய்தார். 

இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள 3வது பிரோமோவில், வீட்டில் இருப்பவர்களில் ஒருவரை யாஷிக்கா நேரடியாக நாமினேட் செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார். அதன்படி யாஷிக்கா ஒருவரைப் பற்றி பேசுகிறார்.

அந்த நபர் சோம்பேறியாக இருப்பதாகவும், எந்த விஷயத்திலும் தலையிடுவது இல்லை எனவும் யாஷிக்கா கூறுவது போல பிரோமோவில் காட்டப்படுகிறது. அந்த நபர் அனேகமாக ஜனனி அல்லது ரித்விகாவாக இருக்க கூடும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close