யாஷிகாவாக மாறும் டேனி: பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2018 11:17 am
character-swap-task-in-biggboss-promo-1

பிக்பாஸ் வீட்டில் இன்று ஒருவர் போல மற்றொருவர் மாறும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரத்தில் 4 நாட்கள் சண்டையிடுவதும் கடைசி 3 நாட்கள் பாசம் பொழிவதும் வழக்கமாகி விட்டது. அதற்கேற்றார் போல டாஸ்க்குகளை கொடுத்துவருகிறார் பிக்பாஸ் . அந்த வகையில் நேற்று புகார் பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்கின் முடிவில் பிரச்னைகள் கிளம்பினாலும், பிக்பாஸ் நினைத்தது போல பெரிதாகவில்லை. 

இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள முதல் பிரோமோவில், ஒருவர் போல மற்றவர்கள் மாறும் கேரக்டர் ஸ்வாப் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் ஒருவருக்கும் கிடைக்கும் டி-ஷர்ட்டில் ஒருவரது புகைப்படம் இருக்கும்.  அவரை போல அந்த நபர் நடந்து கொள்ள வேண்டும். அதன்படி டேனிக்கு யாஷிகாவின் புகைப்படத்துடன் டி-ஷர்ட் கிடைத்தது. பொன்னம்பலத்திற்கு மகத் புகைப்படத்துடன் டி-ஷர்ட் கிடைத்தது. 

யாஷிகா-மகத் போல டேனியும் பொன்னம்பலமும் நடந்து கொள்கின்றனர். இந்த டாஸ்க் ஆரம்பத்தில் ஜாலியாக இருந்தாலும் முடியும் போது பெரிய பிரச்னைகள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close