• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

இந்த வீட்ல யாருமே நேர்மையா இல்ல: பிக்பாஸ் பிரோமோ 1, 2

  Newstm Desk   | Last Modified : 09 Aug, 2018 12:36 pm

9-8-2018-biggboss-promo-1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் பிரோமோவில் தன்னை மற்றவர்கள் மட்டம் தட்டி பேசுவதாக வைஷ்ணவி கூறுகிறார். 

இரு தினங்களாக நடந்து வந்த எனக்குள் ஒருவன் டாஸ்க், நேற்றோடு முடிவுக்கு வந்தது. அந்த டாஸ்கில் பெரும்பாலும் வீட்டில் இருந்த அனைவரும் நன்றாக நடித்தார்கள். ஆனால் அவர்களின் நடிப்பே அந்த வீட்டில் இனி பிரச்னையாக கூடும்.

இன்றைய முதல் பிரோமோவில் வைஷ்ணவி, பாலாஜி மற்றும் மும்தாஜ் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, "இந்த வீட்டில் யாருமே நேர்மையாக இல்லை" என்று வைஷ்ணவி கூறுகிறார். "அதை எப்படி நீங்கள் முடிவு செய்யலாம்" என்று மும்தாஜ் அவரிடம் கேட்கிறார். 

தொடர்ந்து பேசும் வைஷ்ணவி, "இந்த வீட்டில என்னை மட்டம் தட்டுற மாதரி வேற யாரும் செய்தது இல்ல. இந்த வீட்ல இருக்கவங்க பத்தி நான் பிச்சி பிச்சி சொல்லுவேன்" என்று கண்ணீருடன் கூறுகிறார். 

அடுத்து வெளியாகி உள்ள பிரோமோவில். மீண்டும் விவாத மேடை போல செட் போடப்பட்டுள்ளது. அங்கு, இரு அணிகளாக போட்டியாளர்கள் அமர்ந்துள்ளனர். சமையல் அணிக்கு முந்தி செல்லும் போட்டியாளர்கள் கழிவறை சுத்தம் அணிக்கு மட்டும் யாரும் வருவதில்லை என்று சென்றாயன் கேட்கிறார். அதற்கு வைஷ்ணவி பதில் சொல்கிறார். 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close