இந்த சீஸனின் ஜூலி யார் தெரியுமா? - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 10 Aug, 2018 01:30 pm
bigg-boss-promo-2

பிக்பாஸின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. வெளியில் இருக்கும் சோபாவில் அமர்ந்து மும்தாஜ், வைஷ்ணவி, யாஷிகா, ஐஸ்வர்யா மற்றும் மஹத் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

'என்ன பத்தி அவங்க அப்படி பேசுறாங்க, இவங்க அப்படி பேசுறாங்கன்னு தோணுச்சின்னா அதுக்கு நீங்க தான் காரணம். இதத்தான் ஜூலியும் பண்ணுனாங்க. 2 நிமிஷம் முன்னாடி நடந்தத அவங்க காட்டலன்னு சொல்லி, இங்க ஒரு பொய் அங்க ஒரு பொய் சொல்லி, நான் சொன்னது தான் சரின்னு அவங்கள நியாய படுத்திக் கிட்டாங்க' என வைஷ்ணவியிடம் சொல்கிறார் மும்தாஜ். 

'பட் இந்த டைம் அந்த மாதிரி மசாலா எல்லாம் இல்லயே' என ஏக்கத்தோடு கேட்கிறார் யாஷிகா. 'இந்த வீட்ல நெறைய பேச வச்சது நீங்க தான்' எனவும் கூறுகிறார் மும்தாஜ். 

'அப்படியே என்ன ஜூலின்னு சொல்லிட்டிங்கள்ல' என கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்கிறார் வைஷ்ணவி. என்ன பூகம்பம் வெடிக்கிறது என்பதை இரவு பார்ப்போம். 

இன்றைக்கு வெளியான முதல் பிரமோவைப் பார்க்க...

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close