பிக்பாஸ் வீட்டிற்குள் கமல்ஹாசன்: பிரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 12 Aug, 2018 10:30 am
kamal-s-visits-biggboss-house

பிக்பாஸ் பிரோமோவில் இன்று கமல்ஹாசன் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களை சந்திப்பது போன்ற காட்சிகள் காட்டப்படுகின்றன. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எந்த சுவாரஸ்ய சம்பவங்களும் நடக்கவில்லை. அதற்கேற்றார் போல நேற்றைய நிகழ்ச்சியும் டல்லடித்தது. அதனை கொஞ்சமேனும் ஈடு செய்யும் வகையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் கமல். 

விஸ்வரூபம் 2 படத்தின் பிரோமோஷனுக்காக தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் கமல்ஹாசன் சென்றிருந்தார். ஆனால் தமிழ் நிகழ்ச்சிக்கு நடிகை ஆண்டிரியா, பூஜா குமார், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர். அப்போதே கமல் வீட்டிற்குள் வரமாட்டாரா என்று எதிர்பார்த்த போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் இன்று வீட்டிற்கு செல்கிறார். 

உள்ளே, "இது நம்ம வீடுனு சொல்றோம், வரலைனா எப்படி" என்று போட்டியாளர்களிடம் கூறுகிறார். இன்றைய நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் நபரை அழைத்து செல்வதற்காகவே கமல் உள்ளே சென்றிருப்பதாக தெரிகிறது. 

இதை படிச்சீங்களா: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடம்

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close