தமிழ் மொழி விரோதியா வைஷ்ணவி? - டேனியின் பகீர் குற்றச்சாட்டு I பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 13 Aug, 2018 11:40 am

13-08-2018-biggboss-promo-1

இன்றைய முதல் பிரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் படலம் காட்டப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் மூத்தவரான பொனம்பலம் நேற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்று இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் நாமினேஷன் நடைபெறும். அதன் காட்சிகள் தான் இன்றைய  முதல் பிரோமோவில் காட்டப்படுகின்றன. 

அதில், டேனி பேசுவதை தனக்கு வருத்தமளிப்பதாக கூறி அவரை வைஷ்ணவி நாமினேட் செய்கிறார். 

அடுத்தாக டேனி, "வைஷ்ணவியை நாமினேட் செய்ய நிறைய காரணங்கள் உள்ளன. கமல் சாரிடம் நான் தமிழில் சத்தமாக பேசுவது அவருக்கு வருத்தமளிப்பதாக கூறினார். என் மொழியை குறை கூறுவது சரியல்ல. அது எனக்கு மட்டும் அல்ல, என் மொழியை சார்ந்தவர்களையும் கோபப்படுத்தும். முடிந்த வரை தமிழில் பேசுபவர்களை பாராட்டுங்கள்" என்று கூறுகிறார். 

வைஷ்ணவி சொன்ன விஷயத்தை அப்படியே தனக்கு சாதகமாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்க்க நினைக்கிறார் டேனி. வைஷ்ணவி சொன்ன விஷயத்தை அப்படியே மாற்றி, வைஷ்ணவி தமிழ் மொழி விரோதிபோல சித்தரிக்க டேனி முயற்சி செய்வதுபோல் உள்ளது. இதனால், வைஷ்ணவி அந்த இடத்தில் இருந்து வெளியேறுவது போல் காட்டுகின்றனர். இவர்கள் இருவரின் சண்டையை வைத்து இந்த வாரத்தை ஓட்டிடுவாங்க போல இருக்கு...

இதைப் படிச்சீங்களா?

#BiggBoss Day 55: என் நேரத்தை வீணாக்காதீங்க! கடுப்பான கமல்ஹாசன்

Newstm.in

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close