கத்துவேன்னா கத்துவேன்! - இரிட்டேட்டிங் ஐஸ்வர்யா - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 14 Aug, 2018 03:32 pm
bigg-boss-promo-2

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதன் ப்ரோமோவைத் தான் அதிக பேர் பார்க்கிறார்கள். அந்த வகையில் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் நீலம் மற்றும் ஆரஞ்சு என இரண்டு டீம்களுக்கும் டாஸ்க் கொடுக்கப் பட்டுள்ளது. 

வழக்கம் போல இரு அணியினரும் மாறி மாறி சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள். ஐஸ்வர்யா கமல் முன் தான் எதுவும் தெரியாதவர் போல முகத்தை வைத்துக் கொள்கிறார். மற்றபடி வீட்டிற்குள் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அவர் ஆதிக்கம் தான். எதிர் தரப்பில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கூட காது கொடுத்து கேட்க முடியாமல் கத்துகிறார். இப்போது கூட வைஷ்ணவியுடன் சண்டையிடுகிறார். கத்தாத என சொல்வதற்கு, 'கத்துவேன் நான் கத்துவேன்' எனத் தொடர்ந்து கத்துகிறார் (இரிடேட்டிங்). யாஷிகாவை வைஷ்ணவி தடுத்து பிடித்துக் கொள்ள, அதற்காக குரல் கொடுக்கிறார் ரித்விகா. இது சம்பந்தமாகப் பேசுகையில் 'அடி கொடு' என யாஷிகாவிடம் சொல்கிறார் ஐஸ்வர்யா.

நான் மஹத்த காப்பாத்த செஞ்சேன் என்கிறார் வைஷ்ணவி. என்ன காரணத்துக்காக செஞ்சீங்க என உச்சஸ்தாதியில் கத்துகிறார் ஐஸ்வர்யா. (இத பாக்குற நமக்கே இவ்வளவு எரிச்சலா இருக்கே, பாவம் ஹவுஸ்மேட்ஸ்).

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close