#BiggBoss Day 57: யாஷிக்காவிடம் காதலை சொன்ன மகத், ஏன் கமல் முன் கூறவில்லை?

  Newstm Desk   | Last Modified : 14 Aug, 2018 02:24 pm
what-happened-biggboss-day-57

வீட்டின் பெரிய மனிதரான பொன்னம்பலம் எவிக்டாகி வெளியேறிவிட்டார். தற்போது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருடையே முழு கவனமும் பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே. அதற்காக அவர்கள் செய்யும் வேலைகள் சுவாரஸ்மாக இருந்தாலாவது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் புறம் பேசி வெற்றி பெற நினைக்கிறார்கள்.

57ம் நாள் பிக்பாஸ் வீட்டில்...

கமல் உடனான உரையாடல்களுக்கு பிறகான காட்சிகள் தொடர்ந்தன. "நீங்க சொன்ன மாதிரியே பொன்னம்பலம் வெளிய போயிட்டார் சந்தோஷமா" என  மும்தாஜிடம் கேட்டார் சென்றாயன். முன்னதாக பொன்னம்பலம் தான் வெளியே செல்வார் என்று மும்தாஜ் கூறினராம். அது போலவே நடந்து விட்டதால் சென்றாயன் அப்படி கேட்டார். ஜனனி வெளியேறுவது குறித்து பயந்துவிட்டதால் தான், அவரை சமாதானப்படுத்த அவ்வாறு கூறியதாக மும்தாஜ் கூறினார். ஒவ்வொரு முறையும் ஜனனி நாமினேட் ஆகும் போதும் அவர் வெளியேறிவிடுவோம் என்ற பயத்தில் இருப்பது தெரிகிறது. 

உனக்கு நான் எதாவது நல்லது செய்யனும்னு நினைச்சா மும்தாஜ் அப்படி செய்ய விடாம தடுக்குறாங்க என்று யாஷிக்காவிடம் பேசிக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. நேற்றைய நிகழ்ச்சியில் பல சீன்களில் மும்தாஜ் குறித்து யாஷிக்காவிடம் ஐஸ்வர்யா பேசிக்கொண்டே தான் இருந்தார். ஜனனிக்கும் மும்தாஜுக்கும் இடையே நடந்த பனிப்போர் முடிந்து, தற்போது மும்தாஜுக்கும் ஐஸ்வர்யாவுக்கு இடையே பனிப்போர் தொடங்கி உள்ளது. இது போன்று பேசும் போது ஐஸ்வர்யாவுக்குள் தூங்கி கொண்டு இருக்கும் சர்வாதிகாரி எட்டிப்பார்க்கிறார். 

மற்றொரு பக்கம் யாஷிக்கா- மகத் இடையேயான உறவு குறித்து மற்றவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். யாஷிகா அத்தனை பேர் முன் மகத்தை காதலிப்பதாக கூறனார். ஆனால் தனக்கு வெளியே பாய்ஃபிரெண்ட்  இருப்பது பற்றி பேசவில்லை என்று ஜனனி கூறினார். அதற்கு. "மகத் பல முறை யாஷிக்காவிடம் ஐ லவ் யூ என கூறியிருக்கிறார். ஆனால் அத்தனை பேர் முன்னும் கமல் சாரிடம் ஏன்  கூறவில்லை" என மும்தாஜ் பேசினார். 

மகத் இந்த பிரச்னையை நினைத்து கண்கலங்கி கொண்டு இருந்தார். அவருக்கு டேனி ஆறுதல் கூறிக்கொண்டு இருக்க அந்த தினம் முடிந்தது. 

ஜில்லா விட்டு ஜில்லா வந்த  பாடலோடு 57வது நாள் விடிந்தது. இந்த வாரத்திற்கான முதல் டாஸ்க்காக மொபைல் போன் போட்டோகிராபி கொடுக்கப்பட்டது. இதற்காக ஜனனி மாடலாக மாறினார். இந்த டாஸ்கில் டேனி, மகத், சென்றாயன் அணி வெற்றிப்பெற்றது. அதற்காக அவர்களுக்கு கேக் வந்திருந்தது. பிக்பாஸ் வீடு முன்பை விட விளம்பரத்திற்காக அதிகமாக பயன்பட்டு வருகிறது. திரைபடங்கள் முதல் புது மாடல் செல்போன்கள் வரை. பின் இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் நாமினேஷன்கள் தொடங்கின.

இந்தமுறையும் ஓபன் நாமினேஷன்கள் தான் நடந்தது. நாமினேட் செய்ய விரும்பும் நபரின் புகைப்படத்தின் மேல் அம்பை ஏய்த வேண்டும். இதன் படி ஒவ்வொருவராக நாமினேட் செய்தனர். தற்போது இருப்பவர்கள் அனைவரும் கடுமையான போட்டியாளர்கள் என்பதால் நாமினேஷனும் கடுமையாக தான் இருந்தது. ஒவ்வோரு முறையும் நீண்ட உரையாடல்களுக்கு பிறகு தான் நாமினேஷன் நடந்தது. 

முடிவில், ஜனனி, சென்றாயன், டேனி, வைஷ்ணவி ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர். பின் ரித்விகாவை நேரடி நாமினேஷன் செய்தார் தலைவி ஐஸ்வர்யா. 50 நாட்கள் மேல் ஆகியும் இன்னும் ரித்விகாவுடன் நெருக்கமாக முடியவில்லை என்பதை காரணமாக அவர் கூறினார். 

பின் டேனி ஓவராக அதிகாரம் செலுத்துவதாக வைஷ்ணவி கூறிக்கொண்டு இருந்தார். மேலும் வைஷ்ணவியை டேனி நாமினேட் செய்யும் போது, தமிழை இழிவுப்படுத்திவிட்டதாக கூறினார். இதுகுறித்து வைஷ்ணவி பேசிக்கொண்டு இருந்தார். தான் கூறியதை டேனி ட்விஸ்ட் செய்து கூறிவிட்டார் என்றார் வைஷ்ணவி கூறினார்.

இதுகுறித்து டேனியிடம்  பாலாஜி பேசியபோது,  "தமிழை வைத்து வைஷ்ணவியை நீ குறை சொல்லியிருக்க. இது பெரிய பிரச்னையாகும்" என்றார். அதற்கு, "நான் ஒன்னும் சுத்த தமிழ்ல பேசிட்டு இல்ல. மகத் எத்தன தடவ வைஷ்ணவியை திட்டி இருப்பான். அப்போது எல்லாம் எதுவுமே கேக்கல. நான் எதுவும் பண்ணாதப்போவே இவ்வளவு கேள்விகள்" என்றார். இவர்கள் பிரச்னை நடந்து கொண்டு இருக்க நேற்றைய நிகழ்ச்சி முடிந்தது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close