தேவையா இந்த அவமானம் - பிக்பாஸ் ப்ரோமோ 3

  திஷா   | Last Modified : 14 Aug, 2018 09:54 pm
bigg-boss-promo-3

நீலம் ஆரஞ்சு என டாஸ்க் செய்துக் கொண்டிருக்கும் ஹவுஸ்மேட்ஸ் எதிர் டீமுடன் நன்றாக சண்டைப் போடுகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோவும் அப்படித்தான் இருந்தன. இப்போது மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகியிருக்கிறது. 

முதல் ப்ரோமோவில் மஹத்தும் டேனியும் சண்டைப் போடுவார்கள். இப்போது அதுப்பற்றி, 'ஒண்ணும் இல்லடா, டேனி எப்படி ஆடுவான்னு உனக்குத் தெரியும் இல்ல, ஜனங்க காசெல்லாம் யாரு தூக்கிட்டுப் போறது? நான் என்ன சொல்றேன்னா, நம்ம ஒரு வாட்டி அப்படி ஆடி பாப்போம். அவன கடுப்பேத்துறதுக்குத் தானே தவிர, அதுல எனக்கு என்ன கிடைக்கப் போகுது' என சென்ட்ராயனிடம் சொல்கிறார் மஹத். 

மும்தாஜ், மஹத், வைஷ்ணவி, ஜனனி ஆகியோர் ஒன்றாக வெளியில் அமர்ந்திருக்கிறார்கள். எதிர் டீமானா ரித்விகா வெளியில் வருகிறார். 'ரித்து ப்ளூ யூனிஃபார்ம்ல வந்துடு.. வந்துடு' என மும்தாஜ் சொல்கிறார். 'உச்சக்கட்டம் ரித்விகா' என்கிறார் வைஷ்ணவி.

அதற்கு 'யூ ஷட் அப் வைஷ்ணவி உங்களுக்கு அந்தத் தகுதியே அத பேசுறதுக்கு' என்கிறார் ரித்விகா. என்ன நடக்கிறது என்பதை இரவு பார்ப்போம். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close