பொண்ணு தானே நீங்க?- பிக்பாஸ் பிரோமோ

  Newstm Desk   | Last Modified : 15 Aug, 2018 12:55 pm
15-08-2018-biggboss-promo-1-2

இன்றயை பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'பொம்மலாட்டம்' டாஸ்க் தொடர்வது போன்ற காட்சிகள் பிரோமோவில் காட்டப்படுகிறது. 

முதல் பிரோமோவில், மீண்டும் பொம்மை செய்வதற்கான பொருட்களை எடுப்பதில் இரு அணிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது. ரித்விகாவிடம் "இனி இரு அணிகளும் நேர்மையாக விளையாட வேண்டும்" என்கிறார் சென்றாயன். அதற்கு "உங்கள் அணியை முதலில்  நேர்மையாக இருக்க சொல்லுங்க" என்று ரித்விகா அவருக்கு பதில் கூறுகிறார். 

மேலும் அதில் மகத் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு இடையே பிரச்னை ஏற்படுகிறது.

அடுத்ததாக வெளியான பிரோமோவில், ஐஸ்வர்யாவை மகத் தள்ளிவிட்டது பற்றி மும்தாஜிடம் கேட்கிறார் பாலாஜி. அப்போது, "நீங்க பொண்ணு தானே, அப்படி பேசலாமா?" என்று பாலாஜி கேட்கிறார். உடனே, "என்னனு தெரியாமல் பேசாதீங்க" என்று மும்தாஜ் கூறுகிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, "இதே மாதிரி நான் உங்கள தள்ளிவிடட்டுமா" என்று பாலாஜி கூறுகிறார். 

இந்த சண்டை நடக்க காரணமான மகத்தும் ஐஸ்வர்யாவும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close