அடுத்த தலைவர் யார்? பிக்பாஸ் வீட்டில் தொடங்கியது போட்டி - ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 17 Aug, 2018 11:43 am
bigg-boss-promo-1

பிக்பாஸின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. வழக்கம் போல் பிக்பாஸிடமிருந்து வந்திருக்கும் அறிவிப்பு ஒன்றை ஜனனி படிக்கிறார். இந்த வாரத்திற்கான தலைவர் போட்டியில் யாஷிகா மற்றும் மஹத் மற்ற ஹவுஸ் மேட்ஸ்களிடம் கேன்வஸ் செய்து ஆதரவைப் பெற வேண்டும் என எழுத்தப் பட்டிருக்கிறது. 

இதனை படித்து விட்டு, 'நான் மஹத்துக்கு சப்போர்ட் பண்ணுகிறேன்' என்கிறார் ஜனனி. டேனியல், சென்ட்ராயன் இருவரும் யாஷிகாவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவிக்க, 'பாலாஜி அண்ணே நீங்க?' எனக் கேட்கிறார் மஹத். 

'ஏம்பா நீங்க மக்களுக்காக என்ன பண்ணீருக்கீங்க? நாங்களே முட்டாள் ஆகணுமா, எங்கள விட்டுடு பா, மும்தாஜ் மேடம் என்ன சொல்றாங்கன்னு பாரு' என்கிறார். 

'மும்தாஜ் கிட்ட போய் பேசு' என யாஷிகாவிடம் சொல்கிறார் மஹத். 'எப்படி இருந்தாலும் அவங்க விளையாட மாட்டாங்க' என பதில் தருகிறார் யாஷிகா. அப்போது மும்தாஜ் பெட்டில் படுத்திருப்பதைக் காட்டுகிறார்கள். பார்க்கும் போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது போல தெரிகிறது. ஒவ்வொரு நாள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் பிக்பாஸ் வழிவது போலவே இருக்கிறது. யார் ஜெயிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பைக் காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்...

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close