நா இங்க அடிமையா வரல - பிக்பாஸ் 2 ப்ரோமோ!

  திஷா   | Last Modified : 17 Aug, 2018 01:38 pm

bigg-boss-promo-2

இப்போது பிக்பாஸின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் டாஸ்க் தவிர மற்ற நேரங்களில் தன்னை மும்தாஜ் கண்டுக் கொள்வதில்லை என மஹத் முறையிடுகிறார். 

'மஹத்துங்கறவன் டாஸ்க்ல தேவைப்பட்டா, மஹத் உனக்கு என்ன வேணும்ன்னு கேட்டு பண்றாங்க, அந்த டாஸ்க் முடிஞ்சதும் அவன் வேணாம்' என்று மும்தாஜ் நினைப்பதாக மஹத் சொல்கிறார். அதற்கு மும்தாஜோ சிரித்துக் கொண்டிருக்கிறார், 'என்னதான் சிரிச்சாலும் உண்மை மாறாது' என்கிறார் மஹத். 

'நான் இங்க அடிமையா வரல' என மஹத் சொல்ல, இடையில் பஞ்சாயத்து செய்கிறார் பாலாஜி, 'எனக்கும் மஹத்துக்கும் பிரச்னை, என்ன சொல்றாங்க ஓகே, நான் பேச விரும்பல, அவங்க பேசட்டும், என்ன சொல்லணும்ன்னு தோனுதோ சொல்லட்டும்' என்கிறார் மும்தாஜ்.

மிக அருமையாக சண்டை மூட்டிவிடுகிறார் பிக்பாஸ். நல்ல ஸ்கிரிப்ட்... ஆனால், மக்கள் மத்தியில் எடுபடமாட்டேங்குது... நேற்று நடந்தது என்ன என்பதை இன்று இரவு பார்ப்போம். 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close