நீங்க என்ன நினைக்கிறீங்க?! - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 18 Aug, 2018 01:34 pm
bigg-boss-promo-2

பிக்பாஸின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. 'நான் ஒரு இயக்குநராகக் கேட்கிறேன், உங்களால் ஐஸ்வர்யாவின் கோபத்தை வெளிக் காட்ட முடியுமா' என மும்தாஜிடம் கேட்கிறார் கமல். 

இந்த சவாலை மும்தாஜும் சரியாக செய்ததாகவே தெரிகிறது. 'ஏ உனக்குத் தான் எல்லாம் தெரியும்ன்னு நெனைக்காத ஓ.கே, பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூம் டோர ஓபன் பண்ணுங்க, என்ன நெனைச்சிட்டு இருக்கீங்க, நீங்க எல்லாரும், நீங்க மனுஷனா?' என உச்சஸ்தாதியில் ஐஸ்வர்யா போலவே கத்தி பேசி கோபமாகிறார் மும்தாஜ். 
மறுமுனையில் அரங்கில் கைத்தட்டல் அள்ளுகிறது. இதை என்னவென்று சரியாகப் புரிந்துக் கொள்ளாத மஹத், 'இதான் சார் உண்மையான மும்தாஜ்' என்கிறார் அப்பாவியாக. 

இப்போ எல்லாரும் கொஞ்சம் நேர்மையாக இருக்குற மாதிரி இருக்கு, நீங்க என்ன நினைக்குறீங்க என்கிறார் கமல். ஆக, ப்ரோமோவைப் பார்க்கும் போதே இன்றைய பிக்பாஸ் சுவாரஸ்யமாக இருக்கும் போலத்தான் தெரிகிறது. 

மேலும் செய்திகளுக்கு - www.newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close