உதார்விடும் பாலாஜி: பிக்பாஸ் பிரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 19 Aug, 2018 10:36 am
19-08-2018-biggboss-promo-1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் பிரோமோவில் பாலாஜி, மகத், டேனி பற்றி போட்டியாளர்கள் விமர்சிக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன. 

பிக்பாஸ் பிரோமோக்களை போல நிகழ்ச்சி எப்போதும் சுவாரஸ்மாக இருக்காது என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள முதல் பிரோமோவே மொக்கையாக தான் இருக்கிறது. நேற்று நடந்த மற்றறவர்களை பற்றி விமர்சனம் கூறும் அதே டாஸ்க் இன்று தொடர்கிறது. பிரோமோவில் மகத், பாலாஜி மற்றும் டேனி பற்றி மற்ற போட்டியாளர்கள் பேசுகின்றனர். 

மகத் தங்கமான பையன் என்று சென்றாயன் கூறுகிறார். அதற்கு இது என்ன நகைக்கடை விளம்பரமா? கமல் கேட்கிறார். பின் பாலாஜி எதற்கெடுத்தாலும் உதார் விடுகிறார் என்று ரித்விகா கூறுகிறார். பாலாஜி முன்னர் கூறிய, "என் மேல தண்ணீர் ஊற்றட்டும் பார்த்துகிறேன்" என்பதை கமல் கூறி கலாய்கிறார். பின்னர் டேனி குறித்து பாலாஜி பேசும் போது, "அனைவரையும் ஒரு டெம்போவில் ஏற்றிக்கொண்டு, ஒவ்வொருவராக இறக்கி விட்டுவிட்டு, டேனி ஃபைனல்சுக்கு சென்று விடுவார்" என்கிறார். இதற்கு அனைவரும் சிரிக்கின்றனர். ஆக... இன்னைக்கு பஞ்சாயத்து இருக்காது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close