இல்லத்தை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார்? - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 19 Aug, 2018 01:20 pm

biggboss-promo-2

பிக்பாஸின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை என்றாலே எலிமினேஷன் இருக்கும். ஆனால் இந்த வாரம் வைல்ட் என்ட்ரியும் இருக்கிறது. இதற்கான ஹின்ட் நேற்றைய நிகழ்ச்சியிலேயே கிடைத்து விட்டது. வீட்டுக்குள் வரப் போகும் அந்த நபரைத் தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 

தற்போது வந்துள்ள ப்ரோமோவில், 'எவிக்ஷன் நெருங்கிட்டு இருக்கு என கமல் சொல்ல, லைட்டா பதட்டமா இருக்கு சார் என்கிறார் வைஷ்ணவி. மொழி தெரியாத படத்துல க்ளைமேக்ஸ்க்கு வெயிட் பண்ற மாதிரி இருக்கு என சொல்கிறார். இதயம் லப் டப் லப் டப்ன்னு அடிக்குது சார் என்கிறார் சென்ட்ராயன். இதில் உங்கள் கருத்தென்ன என வைஷ்ணவியிடம் கேட்கிறார் கமல், எனக்கு போக வேண்டாம் சார் என பதிலளிக்கிறார் வைஷ்ணவி. அவங்க பண்ற முடிவு எனக்கே கணிக்க முடியல எனும் கமலிடம், கண்டிப்பா இங்க இருந்து ஜெயிக்கனும்ன்னு தான் ஆசையா இருக்கு சென்ட்ராயன்.

அப்போது எலிமினேஷன் கார்டை கையில் வைத்துக் கொண்டு வழக்கமா இத அவங்களுக்குத் தான் காமிப்பேன், காரண கர்த்தா நீங்க தான என்கிறார் கமல் ஆடியன்ஸைப் பார்த்து. 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close