#BiggBoss Day 63: வெரி போல்ட் ரித்விகா, மகத்தை பயன்படுத்திக்கொள்ளும் யாஷிக்கா

  Newstm News Desk   | Last Modified : 20 Aug, 2018 01:18 pm

what-happpened-in-biggboss-day-63

 

கமலே கொட்டாவி விடும் அளவுக்கு சென்று கொண்டு இருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. வார இறுதியில் நடக்கும் பஞ்சாயத்தில் கூட கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லை. மக்களின் பிரதிநிதி என்று கூறிவிட்டு கமல் அமைதிக்காப்பது அதைவிட மோசம். அவர் சொல்லும் கருத்துக்களை எல்லாம் கேட்கும் போது, "நாங்க எப்போ அப்படி சொன்னோம்" என்பது போல தான் இருக்கிறது. தற்போது வீட்டில்இருந்த ஒரே ஒரு வீக்கான போட்டியாளரான வைஷ்ணவியும் வெளியேற்றப்பட்டு விட்டார். தற்போது இருக்கும் 8 பேரும் வெற்றிக்காக எதையும் செய்பவர்கள். அதை கொஞ்சம் சுவாரஸ்யமாக செய்தால் நல்லது. 

பிக்பாஸ் வீட்டில் 63ம் நாள்...

கமல் நிகழ்ச்சியை தொடங்கிய உடன் வேறு எதுவும் பேசாமல் நேரடியாக அகம் டிவி வழியாக  போட்டியாளர்களை சந்தித்தார். உடனே விட்ட இடத்தில் பிடிப்போம் என, மற்றவர்களின் யுக்திகளை சொல்லும் படலத்தை தொடங்கினார். முதலாவதாக மகத் வந்து நின்றார். அவரிடம் எந்த யுக்தியும் இல்லை, கோவக்காரர், ஓவர் நம்பிக்கை, நேர்மை போன்ற விஷயங்களை போட்டியாளர்கள் கூறினர். 

பின் டேனி வந்து நின்றார். அனைவரும் டேனி பற்றி பின்னால் தவறாக பேசியவர்கள் தான். அவர் முன் அவரது யுக்தியை கூற தயங்கினர். அவர் எல்லோருடை யுக்தியையும் தெரிந்து கொண்டு சேஃப்பாக இருப்பது தான் அவருடைய யுக்தி என்றார்கள். அனைவரையும் டெம்போவில் ஏற்றிக் கொண்டு ஒவ்வொருவராக இறக்கிவிட்டுவிட்டு கடைசியில் அவர் இறுதி போட்டிக்கு சென்று விடுவார் என்று நகைச்சுவையாக கூறினார் பாலாஜி.

டேனி எண்டர்டெயின் செய்வதை யுக்தியாக பயன்படுத்தி கொள்வதாக ரித்விகா கூறினார். ஆனால் நாட்கள் ஆகஆக டேனியின் நகைச்சுவை தன்மை குறைந்துவிட்டதாக கமல் சுட்டிக்காட்டினார். அதற்கு,"எங்க சார் எதாவது பண்ண பிராது கொடுத்துட்றாங்க" என்று கூறினார் டேனி. 

அடுத்து எண்டர்டெயினர், ஸ்வீட், எல்லாரையும் சந்தோஷமாக வைத்திருக்க நினைப்பவர் போன்ற கருத்துக்களை பாலாஜிக்கு கூறினர். குப்பை கொட்டினாலும் ஸ்வீட்டா தான் இருப்பாரா என்று கிண்டலிடித்தார் கமல். 

அழகு, பொறுமை, எல்லோருக்கும் நல்லவராக இருக்க நினைப்பது போன்றவற்றை ஜனனிக்கு கூறினர். 

பின்னர் வந்த ரித்விகாவுக்கு, மொக்க ஜோக்ஸ் கூறுவது, நேர்மை, பொறுமை என இருந்த அனைத்து நேர்மறை கருத்துக்களையும் கூறினாரகள். யாஷிக்கா மட்டும் சைலன்ஸ் கில்ஸ் என்றார். ரித்விகா நீதிபதியாக சென்று இருக்கலாம் என்று கூறினார் டேனி.

பின் இதில் ரித்விகாவின் கருத்து தான் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்ததாக கூறினார் கமல். அவருக்கு பிக்பாஸ் ஏதோ ஸ்பெஷல் பரிசு கொடுப்பாராம். 

பாலாஜி நடத்திய கிராம சபை கூட்டம் சிறப்பாக இருந்ததாக கமல் பாராட்டினார். அதில் விடையில்லாமல் இருந்த கேள்விகளுக்கு தற்போது விடை கிடைத்திருக்கும் என்றார் கமல். 

பின்னர் எவிக்‌ஷன் பிரசஸ் தொடங்கியது. நாமினேட் செய்யப்பட்டு இருந்தவர்கள் அனைவரும் வெளியே செல்ல விருப்பமில்லை என்று கூறினார். முதலில் ஜனனி தப்பித்ததாக அறிவித்தார் கமல். மீதம் இருந்தவர்கள் டேனி, சென்றாயன் மற்றும் வைஷண்வி. இதில் டேனியும் சென்றாயனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மற்ற போட்டியாளர்கள் கூறினர். 

பின் டேனி சேஃப் என்று அறிவித்தார் கமல். சென்றாயனை ஸ்டோர் ரூமுக்கும், வைஷ்ணவியை கன்பெஷன் அறைக்கும் கமல் அனுப்பி வைத்தார். பின் பார்வையாளர்களுக்கு வைஷ்ணவி எவிக்டானதை அறிவித்தார். 

பின் வீட்டில் ஸ்டோர் ரூம் பெல் அடித்தது. ஆனால் உள்ளே சென்ற சென்றாயன் அங்கு இல்லை. அவர் தான் வெளியேற்றப்பட்டார் என்ற முடிவுக்கு மற்ற போட்டியாளர்கள் வந்தனர். பின் கன்பெஷன் அறையில் இருந்த வைஷ்ணவிக்கு எவிக்‌ஷன் பற்றி அறிவிக்கப்பட்டது. 

அவர் வீட்டை விட்டு வெளியே வந்ததும், கொடுக்கப்பட்ட அற்புதமான வாய்ப்பை மீண்டும் இழந்து விட்டீர்கள் என்றார் கமல். மேலும், அவர் முன்னர் கூறிய 5 நிமிஷம் கொடுத்தா பிச்சி பிச்சி போட்ருவேன் என்பதை கமல் மீண்டும் கூறினார். போகும் போது சொல்லிவிட்டு தான் போவோமே என்ற முடிவுக்கு வந்தார் வைஷண்வி. 

பின்னர் அகம் டிவி வழியாக கமல் மட்டும் போட்டியாளர்களை சந்தித்தார். எந்த எந்த அறையில் யார் யார் இருக்கிறார்கள் என்று  சென்று பாருங்கள் என போட்டியாளர்களிடம் கமல் கூறினார். வைஷ்ணவி வெளியேற்றப்பட்டதை விட சென்றாயன் காப்பாற்றப்பட்டதை நினைத்து போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

பின்னர் வைஷ்ணவி வெளியேற்பட்டது குறித்து போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. வைஷ்ணி தனது 5 நிமிட பேச்சை தொடங்கினார். கிட்டத்தட்ட வைஷ்ணவி மற்றவர்கள் பற்றி கணித்து வைத்திருப்பது சரியாக இருந்ததை போல தான் தோன்றியது. இத்தனை தெளிவு இருந்தும் அவரது மிகையான உடல் மொழியால் அவர் செய்வது மற்றவர்களுக்கு எரிச்சலூட்டி இருக்க கூடும். ஒரு இடத்தில் தனக்கு எதிரியாக இருப்பவர்களை விட, எரிச்சலூட்டுபவர்களிடம் இருந்து ஒதுங்கவே மக்கள் நினைப்பார்கள். அந்த வகையில் வைஷ்ணவியை அவர்கள் குறிப்பிட்டு குற்றம்சாட்டிக்கொண்டுஇருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. வைஷ்ணவியுடன் தானும் வீட்டில் இருந்தவர்களிடம் பைபை சொல்லிவிட்டு கிளம்பினார் கமல். 

அதன் பின் போட்டியாளர்கள் அனைவரும் தனிதனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். நாம் தான் இந்த வாரம் நாமினேட் செய்யப்படுவோம் என்று மகத்திடம் ஐஸ்வர்யா கூறிக்கொண்டு இருந்தார். நேர்மையாக இருந்ததற்கு தானே வெளியே செல்வோம் என்று மகத் கூறினார். 

மற்றவர்கள் கூறுவதை வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வராதே என்று மகத்துக்கு பலரும் அறிவுரைக்கூறிக்கொண்டு இருந்தனர். மும்தாஜ் மீது அவர் கோபத்தை காட்டியதற்கு யாஷிக்கா தான் காரணம் என்பது போட்டியாளர்களின் கருத்து. இதுகுறித்து ஜனனியிடம் பேசிக்கொண்டு இருந்த போது, ஐஸ்வர்யா நுழைந்து பேச்சை மாற்றியது தெரிந்தது. ஐஸ்வர்யா வந்ததும் மகத் அந்த விஷயத்தை பற்றி பேச மறுத்தார். பின் தனியாக அமர்ந்து  அழுதுக்கொண்டு இருந்தார். பின்னர் வெளியே சென்ற வைஷ்ணவி பற்றி போட்டியாளர்கள் பேசிக்கொண்டு இருந்ததோடு நிகழ்ச்சி முடிந்தது.

வீட்டில் தற்போது இருப்பது 8 போட்டியாளர்கள். அனைவரின் நோக்கமும் பைனல்ஸ் தான் என்றாலும் அதற்கு அவர்கள் தேர்வு செய்யும் பாதை என்ன என்பது தான் முக்கியம். ஆனால் இந்த சீசனை பொறுத்தவரை போட்டியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அடித்து பிடித்து இறுதிப்போட்டிக்கு செசல்லலாம். கமல் எதுவும் கேட்க போவதில்லை. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.