#BiggBoss Day 64: ஐஸ்வர்யா ஆர்மியின் ஒரே ஆள் பிக்பாஸ் மட்டும் தான்

  Newstm Desk   | Last Modified : 21 Aug, 2018 12:20 pm
what-happened-in-biggboss-day-64

 

சீரியலை விட மோசமாக சென்று கொண்டு இருக்கிறது பிக்பாஸ். தொடர்ந்து ஒரே மாதிரியான டாஸ்க்குகள், வாக்குவாதங்கள் என ஸ்கிரிப்டை மாற்றவே இல்லை போல. நடக்கும் பிரச்னையெல்லாம் ஒரு சிலருக்கு இடையில் மட்டுமே நடக்கிறது. உதராணமாக ஐஸ்வர்யாவும், மகத்தும் மும்தாஜை திட்டும் போது என்ன கூறுவார்கள் என்று நாமே கணித்துவிடலாம்... அந்தஅளவுக்கு பார்த்த சீன்கள் தான். 

பிக்பாஸ் வீட்டில் 64ம் நாள் என்ன நடந்தது...

63ம் நாள் காலை காட்சிகள் காட்டப்பட்டன. பிஸ்தா பாடல் ஒலிக்க வழக்கமான நடனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. போட்டியாளர்கள் பெட்டில் இருந்து எழுந்திருக்கும் முன்பே அன்றைய நாளுக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டையே  பிரோமோஷன் செய்யும் இடமாக தான் பயன்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் நேற்று செல்போனில் போட்டோ எடுக்கும் டாஸ்க். அந்த செல்போனின் கேமரா திறனை காட்டுவதற்காக!

இதற்காக இரு அணிகளாக பிரிந்த போட்டியாளர் சிறப்பாக செயல்பட்டனர். மும்தாஜ் பங்கேற்கவில்லை. இதில் மகத் அணி வெற்றி பெற்றதாக அறிவித்தார் தலைவி யாஷிகா. 

டேனிக்கும் யாஷிக்காவும் இடையே இருக்கும் நட்பை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. இருவரும் வீட்டில் உள்ள அனைவரை பற்றியும் பேசிக் கொள்கின்றனர். இருவருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இதுவரை நடக்கவில்லை. ஆனால் வெளியே அவர்கள் தங்களை நெருங்கிய நண்பர்கள் எனவும் கூறிக்கொள்வதும் இல்லை. நேற்றும் அவர்கள் தனியாக பேசிக்கொண்டு இருந்தனர். தன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என டேனியிடம் யாஷிக்கா கேட்டுக்கொண்டு இருந்தார். பின், "ஐஸ்வர்யாவும், மகத்தும் ஏன் குழுந்தைதனமாக நடந்து கொள்கிறார்கள்" என யாஷிக்கா கேட்டார். அதற்கு, "இப்போது கூட நாம் தனியாக பேசிக்கொண்டு இருப்பதை பற்றி தான் அவர்கள் நினைத்துக் கொண்டு இருப்பார்கள்"என்றார் டேனி.

உன் ஃபிரெண்ட் தானே யாஷிக்கா, பிரச்னைனா அவக்கிட்ட பேசமாவே இருப்பியா என்று ஐஸ்வர்யாவிடம் கேட்டுக்கொண்டு  இருந்தார் ரித்விகா. அதற்கு பதில் சொல்ல முயன்று அழுதே விட்டார் ஐஸ்வர்யா. ஜனனி யாரைப்பற்றியோ பெயர் சொல்லாமல் பேசிக்கொண்டு இருந்தார். தனக்கு இருக்கும் பகையை மற்றவர்கள் மூலம் தீர்த்துக்கொள்வதாக அவர் கூறினார். அந்த யாரோ டேனியா, யாஷிக்காவா என்பதில் தான் குழப்பம். 

பின் டேனியை தனியாக அழைத்து யாஷிக்காவுக்கு என்ன தான் பிரச்னை என்று விசாரித்தார் மகத். எதையும் பேசி மாட்டிக்கொள்ள கூடாது என்று டேனி நினைத்தாரோ என்னவோ மகத்தையும் யாஷிக்காவையும் தனியாக  பேச சொல்லிவிட்டு ஒதுங்கி கொண்டார். 

மகத்தை பேச விடாமல் யாஷிக்கா தன்னிலை விளக்கம் அளித்துக்கொண்டு இருந்தார். காலையில் எழுந்தால் கூட அவர் மகத்தையும் ஐஸ்வர்யாவையும் பற்றிதான் யோசிக்கிறாராம். 

முன்னதாக கொடுக்கப்பட்ட டாஸ்கில் வெற்றி  பெற்றதற்காக அந்த அணிக்கு சிறப்பு இரவு உணவு அனுப்பப்பட்டது. யாரோ மும்தாஜை சாப்பிட அழைக்க, நான் தான் டாஸ்க்கை செய்யவே இல்லையே என்று தனியாக அமர்ந்திருந்தார் மும்தாஜ். அவர் சென்றிருந்தாலும், மகத் தேவையில்லாமல் பேசியிருக்க கூடும். அவர்கள் சாப்பிட்டு கொண்டு இருக்க அந்த நாள் நிறைவடைந்தது. 

64ம் நாள் காலையில் 'நான் சால்டு கோட்டை' பாடல் ஒலிக்கப்பட்டது. இப்போதெல்லாம் யாஷிக்கா-ஐஸ்வர்யாவின் நடனத்தை விடவும் ரித்விகா- ஜனனியின் நடனம் ரசிக்கும் படியாக உள்ளது. அன்றைய தினத்தின் முதல் வேலையாக நாமினேஷன் படலங்கள் தொடங்கின. இந்த முறை ஜோடி ஜோடியாக பிரிந்து நாமினேட் செய்ய வேண்டும். ஒரு ஜோடி இரண்டு பேரை தான் நாமினேட் செய்ய முடியும். அவர்கள் நாமினேட் செய்ய விரும்பும் நபரின் புகைப்படம் கொண்ட பானையை உடைக்க வேண்டும். 

முதல் ஜோடியாக வந்த பாலாஜியும், மகத்தும் ஐஸ்வர்யா மற்றும் மும்தாஜின் பெயரை கூறினர். 

இந்த நாமினேஷனுக்கு பிறகு ஜனனியும் மும்தாஜும் தனியாக பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களுக்குள் புதிதாக நட்பு பூத்திருக்கிறது. கடந்த வாரம் அவர்களுக்கு இடையே நடந்த பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவிக்கப்படாத செய்தி. யாஷிக்கா தலைவியாக இருப்பதால் நேரடி நாமினேஷனாக யாரை தேர்வு செய்வார்கள் என்பது பற்றி அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். 

இதே போல மற்றவர்களும் தனித்தனியாக பேசிக்கொண்டு இருந்தனர். 

பின்னர் வந்த மும்தாஜ் மற்றும் டேனி ஜோடி மகத் மற்றும் ஜனனியை நாமினேட் செய்தனர். முதலில் மகத்தா அல்லது ஐஸ்வர்யாவா என்ற குழப்பதில் இருந்தார் மும்தாஜ். ஐஸ்வர்யாவின் பெயரை அவர் தேர்வு செய்து விட கூடாது என்பதில் தெளிவாக இருந்த டேனி பேசி சமாளித்து மகத்தின் பெயரை தேர்வு செய்ய வைத்தார். இதுகுறித்து பின்னர் ஐஸ்வர்யா யாஷிக்காவிடம் அவர் கூறினார். அடுத்தாக ஜனனியும், சென்றாயனும் டேனி மற்றும் ஐஸ்வர்யாவை தேர்வு செய்தனர். 

பின் வந்த ரித்விகாவும் ஐஸ்வர்யாவும் மகத் மற்றும் மும்தாஜை தேர்வு செய்தனர். அப்போது மும்தாஜின் மீது உள்ள மொத்த கோபத்தையும் அந்த பானையின் மீது காட்டினார் ஐஸ்வர்யா. 

முடிவில் ஐஸ்வர்யா, மகத், மும்தாஜ், சென்றாயன் மற்றும் பாலாஜி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். யாஷிக்கா தலைவி பதிவுக்கு உரிய பலத்தால் ஐஸ்வர்யாவை காப்பாற்றினார். தொடர்ந்து 4வது வாராமாக ஐஸ்வர்யா ஏதோ ஒரு வழியில் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். ஐஸ்வர்யா ஆர்மியின் ஒரே ஆள் பிக்பாஸாக  தான் இருக்க கூடும். ஐஸ்வர்யா நாமினேஷனில் வந்தால் அவருக்கு குறைவான ஓட்டுகள் தான் வரும் என்பது பிக்பாஸை தொடர்ந்து பார்க்காதவர்களுக்கு கூட தெரிந்த விஷயம். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று யாஷிக்கா மகத்தை நாமினேட் செய்யவில்லை. இனி நடக்கும் பிரச்னைகளை சேர்ந்தே எதிர்கொள்ளலாம் என்று யாஷிக்காவும் ஐஸ்வர்யாவும் கட்டியணைத்துக்கொண்டனர். 

அடுத்த வாரம் யாஷிக்கா ஐஸ்வர்யாவை தலைவராக தேர்வு செய்யக்கூடாது என்று மும்தாஜ் அன்ட் கோ முடிவு செய்தது. 

பின்னர் அடுத்த பொருளின் பிரோமோஷனுக்காக கிரிக்கெட் விளையாடும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதிலும் மகத் ஏமாற்ற நினைக்க நடுவரான மும்தாஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் தரக்குறைவாக பேசுகிறார் என்பது நமக்கு தெரிகிறது, ஏனோ கமலுக்கோ மற்ற போட்டியாளர்களுக்கோ தெரிவதே இல்லை. 

இந்த டாஸ்க்கிலும் மகத் அணி தான் வெற்றி பெற்றது.

தொடர்ந்து மும்தாஜை கடுமையாக பேசி வரும் மகத்துக்கு சிலர் அறிவுரை கூறிக்கொண்டு இருந்தனர். அதையெல்லாம் கேட்கும் நிலையில் மகத் இல்லை. மீண்டும் தரக்குறைவான வார்த்தைகளால் மும்தாஜை  திட்டிக்கொண்டு இருந்தார். 

இந்த வாரம் முழுக்க மும்தாஜ் தான் அவர்களது டார்கெட் என்பது தெரிந்துவிட்டது. தினம் தினம் ஒரே மாதிரியான காட்சிகளை பார்த்துக்கொண்டு இருப்பதால் மகத் என்ன பேசுவார், ஐஸ்வர்யா என்ன பேசுவார் என்பது பற்றி நமக்கும் தெரியும்... பின் ஏன் தனியாக நிகழ்ச்சியை வேறு பார்த்துட்டு?

பிக்பாஸ் 2 : றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள் I 9ம் நாள்  I

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close