நான் யாஷிகாவை காதலிக்கிறேன் - பிக்பாஸ் ப்ரோமோ 2 & 3

  திஷா   | Last Modified : 21 Aug, 2018 02:47 pm
bigg-boss-promo-2-3

பிக்பாஸ் வீட்டில் இன்று விருது விழா நடக்கிறது. ஆனால் இது கொண்டாடப்படுவதற்கு இல்லை. குற்றங்களை சுட்டிக் காட்டுவதற்காகவும், இன்னும் கலகமூட்டவும் பிக்பாஸ் செய்திருக்கும் சதி. வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், அடுத்தவர் உழப்பை உறிஞ்சும் அட்டை அவார்டை மும்தாஜுக்குக் கொடுக்கிறார் யாஷிகா. 'பெஸ்ட் பர்ஃபாமர்ல அவங்கள அவங்களே செல்ஃப் நாமினேட் பண்ணிக்கிட்டாங்க' அதுக்குத்தான் இந்த விருது என விளக்கமும் கொடுக்கிறார். 'பண்ணல, நான் செல்ஃப் நாமினேட் பண்ணிக்கிட்டேனா என மற்ற ஹவுஸ் மேட்ஸைப் பார்த்துக் கேட்கிறார் மும்தாஜ். 'இல்ல, பட் நீங்களும் நீங்க பெஸ்டா பண்ணேன்னு சொன்னீங்க' என ஜனனி யாஷிகாவை சுட்டிக்காட்ட, மண்டையை சொரிகிறார் யாஷிகா. 

பொய்யாக நீலிக் கண்ணீர் விட்டு, தனக்கான காரியத்தை சாதித்துக் கொள்ளும் முதலை விருதை ஜனனிக்குக் கொடுக்கிறார் யாஷிகா. 'நீங்க தப்பா பாக்குறீங்கன்னு நினைக்கிறேன், பிக்பாஸ் இது எனக்கு செட் ஆகாது, ஸோ இதை நான் எடுத்துக்க முடியாது' என விருதை அங்கேயே வைத்துவிட்டு கீழிறங்குகிறார் ஜனனி. சென்ற சீசனில் ஓவியா செய்தது கண்முன் வந்துப் போகிறது. 

அடுத்ததாக வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், குற்றவாளி கூண்டில் நிறுத்தப் பட்டிருக்கிறார் மஹத். 'நீங்க வெளில பேசும் போது ஒரு மாதிரி இருக்கீங்க, என் கிட்ட பேசும் போது ஒரு மாதிரி இருக்கீங்க, அது எனக்கு ஹர்ட் ஆச்சு' என்கிறார் யாஷிகா. 

'நான் மறைக்கணும்ன்னு முயற்சி பண்ணினதுக்கு என்ன காரணம்ன்னா, வெளில ஒரு பொண்ண லவ் பண்றேங்கறது தெரிஞ்சும், இங்க ஏற்பட்டிருக்க ஒரு சூழ்நிலை. அத எப்படி நியாயப் படுத்துறதுன்னு தெரில. எனக்கு வந்து உங்க மேல லவ் இருக்கு' என மஹத் விளக்கம் கொடுக்க, உடனே யாஷிகாவின் முகம் பிரகாசமாகிறது. 
 

'ஒண்ணு வெளில இருக்கவங்கள சந்தோஷப் படுத்தணும். உள்ள இருக்கவங்க மேலயும் காட்டணும்ன்னா, எது நிஜம்?' என்கிறார் பாலாஜி. 

மஹத்திற்கும், யாஷிகாவிற்கும் வெளியில் காதலர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close