நான் இனி மகத்துடன் இல்லை: காதலியின் ஓபன் ஸ்டேட்மெண்ட்

  Newstm Desk   | Last Modified : 22 Aug, 2018 08:13 pm

i-am-not-with-mahat-anymore-prachi-s-statement-on-instagram

"இனி நான் மகத்துடன் இல்லை" என்று பிக்பாஸ் போட்டியாளர் மகத்தின் காதலியும் முன்னாள் மிஸ் இந்தியா வெற்றியாளருமான பிராச்சி மிஸ்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

This is how #mahat went inside the house, I sent someone whom I love and we planned our life around the big boss timing etc. I am making my personal life public so that ppl who are bombarding my social media with msgs of sympathy or filthy things - plz know one thing that mahat Went inside Like this! He was in love and I still am.... To answer everyone - I am not with him anymore, but I will meet him in Person and discuss everything. He is in love with Yashika and that’s open now, I am hurt but this will not change my life and I will take care of myself. He is mean to Mumtaz and his only well wisher janani , he is not standing for her too! It’s a humble Request to everyone plz stop asking me anything about him, thank you for all the msgs and concern that you have shown, it’s my personal life and I will take care. I AM NOT WITH MAHAT SO PLS LEAVE MY SOCIAL MEDIA FOR MY WORK 🙏🏻 Thank you

A post shared by Prachi Mishra (@mishraprachi) on

பிக்பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்கள் கடந்து விட்டது. தற்போது அந்த வீட்டில் 8 பேர் இருக்கின்றனர். ஒரே வீட்டில் 50 நாட்களுக்கு மேல் இருக்கும் நபர்களுக்கு இடையே நட்பு உருவாகிவிடும். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் சிலர் நெருங்கிய நண்வர்களாகி உள்ளனர். அந்த வகையில மகத் மற்றும் யாஷிகா ஆனந்த்துக்கு இடையே நட்பையும் தாண்டி காதல் மலர்ந்துள்ளது.

இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் மகத்தும் பிரபல மாடல் பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் யாஷிகாவை தான் காதலிப்பதாக மகத் மற்ற போட்டியாளர்கள் முன் தெரிவித்துள்ளார். 

யாஷிகா மற்றும் மகத் இடையேயான உறவு குறித்து முன்னரே சிலர் பிராச்சியிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது மகத் தன்னை தான் காதலிப்பதாக பிராச்சி தெரிவித்து இருந்தார். மேலும் யாஷிகாவுக்கு மகத் மேல் உருவாகி இருப்பது வெறும் ஈர்ப்பு மட்டும் தான் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. அதில் மகத் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு பிராச்சியில்லாமல் தான் இருக்கப்போவது குறித்து பேசியுள்ளார். 

அந்த வீடியோவோடு,"இப்படி தான் பிக்பாஸ் வீட்டிற்குள் மகத் சென்றார். என்னை காதலித்த ஒருவரை தான் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தேன். தொடர்ந்து எனக்கு பல அறிவுரைகளும், தேவையில்லாத வசைகளும் வருவதால் எனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பொது வெளியில் கூறுகிறேன். மகத் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற போது என்னை காதலித்துக்கொண்டு இருந்தார். நான் இப்போதும் அவரை காதலிக்கிறேன். நீங்கள் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு என்னுடைய பதில் ஒன்று தான்.

நான் இனி மகத்துடன் இருக்க மாட்டேன். ஆனால் அவர் வெளியே வந்ததும் அவரிடம் நடந்தவை குறித்து பேசுவேன். அவர் இப்போது யாஷிகாவை காதலிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இது என்னை காயப்படுத்தி விட்டது. ஆனால் இதனால் என் வாழ்க்கை எந்த விதத்திலும் மாறாது. நான் என்னை பார்த்துக்கொள்வேன். மும்தாஜிடம் அவர் தவறாக நடந்து கொள்கிறார். மகத்தின் நலம் விரும்பியாக இருப்பவர் ஜனனி மட்டுமே. அவருக்கு ஆதரவாகவும் மகத் நிற்பதில்லை. இனி மகத் பற்றி என்னிடம் யாரும் கேட்க வேண்டாம் என்று அனைவரிடமும் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி. நான் இனி மகத்துடன் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close