தண்ணி வேணுமா இல்ல குப்பை வேணுமா? - பிக்பாஸ் ப்ரோமோ 3

  திஷா   | Last Modified : 22 Aug, 2018 07:31 pm
bigg-boss-promo-3

பிக்பாஸின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஜனனியும், ரித்விகாவும் ஐஸ்வர்யாவை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை இது பிக்பாஸ் கொடுத்த டாஸ்கா எனத் தெரியவில்லை. 

'ஷாரிக் பையா பாவம், ஷாரிக் பையா பாவம், இப்போ இப்போ நான் யாருன்னு காட்டுறேன். எனக்கு அந்தப் பாட்டுப் பாடு' என ராணியாக இருந்தப் போது ஐஸ்வர்யா எப்படி நடந்துக் கொண்டாரோ, அதே மாதிரி செய்கிறார் ஜனனி. 

'ராணி மகா ராணி ராஜ்ஜியத்தின் ராணி' என வேகமாக நடந்துக் கொண்டே பாடுகிறார் ரித்விகா. யாரிவர் என ஜனனி கேட்க, அந்த மகா ராணிக்கு இவர் தான் காவலர் என்கிறார் ரித்விகா. 

இவர்கள் இருவரும் செய்வதை, எதுவுமே தெரியாதவர் போல நமட்டுச் சிரிப்புடன் ஐஸ்வர்யா பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறம் பாலாஜி அமர்ந்திருக்கிறார். அவரைப் பார்த்து தண்ணி வேணுமா என்கிறார் ஜனனி. தண்ணி வேணுமா இல்ல குப்பை வேணுமா என்கிறார் ரித்விகா. அப்போது பாலாஜியின் முகம் காட்டப் படுகிறது.   

மேலும் செய்திகளுக்கு - www.newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close