பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் யார் நல்லவர் என்ற கேள்விக்கு ஓவியா பதில் அளித்துள்ளார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் 60 நாட்களையும் கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்னைகள் பார்வையாளர்களை கடுப்பாக்கி வருகிறது. அதுவும் சிலர் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது, சூழ்ச்சி செய்து வெற்றி பெற நினைப்பது என முழுக்க முழுக்க எதிர்மறையாக நடந்து கொண்டு இருக்கும் நிகழ்ச்சியை பலர் பார்ப்பதையே நிறுத்திவிட்டனர்.
No one can replace u in BB 😎 mumtaz is doing gud in her own way but Oviya is legend 😉 mumtaz is good tho!
இந்நிலையில் பிக்பாஸ் 2 குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஓவியா பதில் அளித்துள்ளார். ஓவியாவின் ட்விட்டர் பதிவில் கமெண்ட் செய்துள்ள ரசிகர் ஒருவர், "பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் யாருமே உங்களை போல நல்லவராக இல்லை, மும்தாஜ் கொஞ்சம் ஓ.கே" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு, "அனைவரும் நல்லவர்கள் தான். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதில்லை" என்று ஓவியா கூறியுள்ளார்.
newstm.in