ஒரு குறும்படம் போடலாமா?! - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 25 Aug, 2018 05:03 pm
bigg-boss-promo-2

பிக்பாஸ்-2 இந்த வாரம் சற்று பரபரப்பாக இருக்கும் போல் உள்ளது. ப்ரோமோ அப்படித்தான் இருக்கும் நிகழ்ச்சி மந்தமாகத் தான் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இப்போது வந்திருக்கும் இரண்டாவது ப்ரோமோவில், 'வருத்தப் படுங்க, மேம்பட்டா எனக்கு நல்லது, பிக்பாஸ் முதல் சீசனோட ஆவரேஜ் ஐக்யூ - வ விட இப்போ ரொம்ப கம்மியா இருக்கு என கமல் சொல்ல, மும்தாஜ் அதை ஒத்துக் கொள்கிறார். 

இப்போ நீங்க சொல்லுங்க இந்த 2 பேர்ல சரியா நடந்துக்காதது யாரு மும்தாஜா, மஹத்தா என பார்வையாளர்களைப் பார்த்து கமல் கேட்க, மஹத் என தெறிக்க விடுகிறார்கள் ஆடியன்ஸ். 
பிறாகு மஹத்தைப் பார்த்து ஒண்ணுமே நடக்காத மாதிரி சிரிச்சிக்கிட்டு இருக்கீங்களே என கமல் கேட்க, 'என்ன சார் சொல்றது' என்கிறார் மஹத். 


'அப்படியா அப்போ நீங்க சொல்ல வேணாம், நாங்க சொல்றோம், ஒரு குறும்படம் போடலாமா?' என ஆடியன்ஸைப் பார்த்துக் கமல் கேட்க அரங்கத்தில் சத்தம் வானைப் பிளக்கிறது. 

ஆக, 2-வது சீசனின் முக்கிய நிகழ்ச்சியாக இது இருக்கும் எனத் தெரிகிறது. 
www.newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close