பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார் மகத்!

  Newstm Desk   | Last Modified : 26 Aug, 2018 11:14 am
mahat-got-evicted-from-bb-house-today

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று மகத் வெளியேற்றப்பட்டார்.  

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஒரு வாரமாகப் போட்டியாளர்கள் வரம்பு மீறி நடந்து கொண்டனர். குறிப்பாக மும்தாஜ் மற்றும் டேனியிடம் மகத் வரம்பு மீறி நடந்து கொண்டதற்குப் பார்வையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் இதுகுறித்து நேற்று விசாரித்தார். பின்னர் மகத் செய்தவை குறித்து ஒரு குறும்படமும் போடப்பட்டது.  

இன்றைய நிகழ்ச்சியில் போட்டியில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என்று தெரிந்துவிடும். இந்நிலையில் மகத் தான் இன்று வெளியேற உள்ளார் என்ற தகவல் வேகமாகப் பரவிவருகிறது. அவர் செய்த குற்றத்திற்காக ரெட் கார்ட் காட்டி அவரைப் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றுகின்றனர். எனவே இனி யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் தனியாக ஆட்டத்தை ஆட வேண்டும். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close