அழுவாச்சியாக காட்சியளிக்கும் பிக்பாஸ் வீடு: பிரோமோ 1

  சுஜாதா   | Last Modified : 27 Aug, 2018 11:04 am
bigg-boss-promo1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் பிரோமோவில் வீட்டில் உள்ள அனைவரும் அழுவதை போல காட்டப்படுகிறது.

ஒரு பக்கம் நம் வீடு சந்தோஷமாக இருந்தாலும், மறுபக்கம் வீடு களை இழந்து இருக்கிறது என்று ரித்விகா ஒரு அறிக்கையை படிக்க, வீட்டில் உள்ள சென்ட்ராயன், யாஷிகா உட்பட அனைவரும் கண் கலங்கி பிக் பாஸ் வீட்டை அழ வைக்கின்றனர்.

நேற்றைய எபிசோடில் மஹத் வெளியேறிய நிலையில், யாஷிகா மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார் என்பது ஊரறிந்த விஷயம். இந்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, இந்த வாரத்தின் தொடக்கமே வீட்டில் உள்ள போட்டியாளர்களை, அவர்களது குடும்பத்தை  பற்றி பேசவைத்து, அழுவாச்சி நாடகத்தை நடத்தி இருக்கிறார் பிக் பாஸ்.

"எந்த குழம்பு நீ வெச்சாலும், இது சரி இல்ல, அது சரி இல்ல" என்று சொல்லுவேனே என்று சொல்லி அழுகிறார் சென்ட்ராயன். பின்னர் "மம்மி நீ ஊட்டி விட்டா தானே நைட் தூங்க போவேன்" என்று சொல்லி அழுகிறார் யாஷிகா. இப்படி ஒவ்வொரு வரும் அவரவர் நெருங்கிய உறவுகளை பற்றி அழுது புலம்பி, ஆடியன்ஸ்களை அழவைக்க போகிறார் பிக்பாஸ். 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close