கேமை ஸ்டார்ட் செய்த விஜய லக்‌ஷ்மி - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 27 Aug, 2018 03:06 pm
bigg-boss-promo-2

பிக்பாஸ் வீட்டை விட்டு மஹத் வெளியேறி விட்டார். இனி வீடு ஓரளவு அமைதிப் பூங்காவாக இருக்கும் என பார்வையாளர்கள் நினைத்தனர். ஆனால் அது முற்றிலும் தவறு என்பதை நிரூபிக்கும் விதமாக இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

இந்த வாரத்தின் தலைவர் சென்ட்ராயன் என்பதை நேற்று கமல் முன் போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் தற்போது வந்துள்ள ப்ரோமோவில், 'நான் ஒண்ணு சொல்வேன், கோவப் பட மாட்டேன்னு சொல்லுங்க' என சென்ட்ராயன் விஜய லக்‌ஷ்மியிடம் சொல்கிறார். 
'மாட்டேன்' என விஜி சொல்ல, 'மும்தாஜ் மேடம் வந்து தோசை கீச கேட்டாங்கன்ன, நம்ம எண்ணெய்ல போட்டுக் குடுத்துடாதீங்க, ஆலிவ் ஆயில்ல போட்டுக் கொடுங்க' என்கிறார் சென்ட்ராயன். 

'அவங்க போட்டுக்குவாங்க, ஒருத்தங்க எந்திரிச்சி வரும்போதெல்லாம் பண்ணிக் குடுக்கனும்ன்னு இல்லல்ல? வேலைய முடிச்சிட்டா, எனக்கும் வேலை இருக்கு. ஸோ எப்போ பாத்தாலும் என்னால கிச்சன்ல நிக்க முடியாது. பக்கத்துலயே இருந்து பாத்துக்கணும்ன்னா, நீங்க பக்கத்துலயே இருந்து பாத்துக்கோங்க. நான் இங்க அஸிஸ்டென்ட் கிடையாது, நான் போட்டியாளர்' என விஜி பொரிந்துத் தள்ள 'சரி ஓகே' என இடத்தை காலி செய்கிறார் சென்ட்ராயன். 

ஆக, வைல்ட் கார்டில் உள்ளே வந்த விஜி, தன்னுடைய கேமை ஸ்டார்ட் செய்து விட்டார். 
 www.newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close