பாலாஜி கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு!- பிக்பாஸ் பிரோமோ 2, 3

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2018 01:44 pm
biggboss-promo-2-and-3

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 மற்றும் 3வது பிரோமோவில் போட்டியாளர்கள் குடும்பத்தினர் வீட்டிற்குள் வரும் காட்சிகள் காட்டப்படுகின்றன. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்களின் குடும்பத்தினர் அவர்களுக்கு பரிசுகளையும், கடிதத்தையும் அனுப்பி இருந்தனர். அந்த காட்சிகள் இன்றும் தொடர்கிறது. அதில், பாலாஜிக்கு அவரது மனைவி மற்றும் மகள் போஷிகாவிடம் இருந்து கடிதமும் பரிசும் வந்துள்ளது. அந்த கடிதத்தில், தான் பாலாஜியை நண்பராக மட்டும் தான் பார்ப்பதாக நித்யா எழுதி உள்ளார். 

வெளியே சென்றதும் நித்யாவுடன் இணைந்து வாழலாம் என்று நினைத்திருந்த பாலாஜி, இந்த கடித்தத்தை படித்ததும் அழுகிறார். அவரை மற்றவர்கள் சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தனர்.

3வது பிரோமோவில், ஜனனியின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கின்றனர். ஐஸ்வர்யா வைத்திருக்கும் பொம்மையை ஜனனியின் தங்கை எடுத்துக் கொண்டு செல்கின்றார். பின்னர், பாலாஜியிடம் ஜாக்கிரதையாக இருக்க சொல்லி ஜனனியிடம் அவரது தாய் கூறுகிறார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close