நான் ஏன் யாஷிகாவால் ஈர்க்கப் பட்டேன் - ரகசியம் உடைக்கும் மஹத்

  திஷா   | Last Modified : 29 Aug, 2018 04:00 am
mahat-explains-why-he-was-attracted-to-yaashika

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மஹத், முகம் சுளிக்கும் செயல்பாடுகளால் கடந்த வாரம் ரெட் கார்டுடன் வெளியேறினார். இதில் அவருடைய பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இரண்டு பக்கங்களும் வெளியில் வந்தது. 

ஏற்கனவே பிராச்சி என்ற பெண்ணுடன் காதலில் இருக்கும் மஹத், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகாவுடனும் காதலில் விழுந்தார். யாஷிக்காவும் காதலன் இருக்கிறார் என்பது வேறு விஷயம். 

இந்நிலையில் வெளியில் வந்த மஹத் இதுபற்றி வாய் திறந்துள்ளார். "தனக்குப் பிடித்த குணம் உள்ளவருடன் ஒரே வீட்டில் இருந்தால் நிச்சயம் ஒரு வித ஈர்ப்பு உண்டாகும்.  அதுவும் தொடர்ந்து 70 நாட்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. டி.வி, ஃபோன் போன்ற மற்ற விஷயங்கள் எதுவும் இல்லாத நிலையில் இந்த ஈர்ப்பு மிக சகஜமாகவே வரும். அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் இருந்தால் தான் இதை மற்றவர்களும் உணர்ந்துக் கொள்ள முடியும். 70 நாட்கள் அந்த வீட்டில் இருந்ததால், அதன் கஷ்டங்களும் வலியும் எனக்கு மட்டுமே தெரியும்" என கூறியிருக்கிறார். 
www.newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close