பல வருடங்களுக்கு பிறகு தாயை சந்தித்த பிக்பாஸ் ஐஸ்வர்யா!

  Newstm Desk   | Last Modified : 30 Aug, 2018 11:25 am
aishwarya-dutta-met-her-mother-after-long-time

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் பிடித்தமான நபராக இருந்த ஐஸ்வர்யா, பின்னர் தனது கோபத்தால் பலர் வெறுக்கும் நபராக மாறிப்போனார். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் அவர் தனது தாயையை நீண்ட நாட்களுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் சந்தித்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஐஸ்வர்யா தத்தா தனது தாயை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நேற்று நடந்தது. கடந்த வாரம் வீட்டில் நடந்த எதிர்மறை சம்பவங்களுக்கு எல்லாம் சமமாக நேர்மறை காட்சிகளை காட்டி நல்ல பெயர் வாங்க நினைத்திருக்கிறார் பிக்பாஸ். அதற்கேற்றார் போல இந்த வாரம் முழுக்க சென்டிமெண்ட் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது பிக்பாஸ் வீடு. 
போட்டியாளர்களுக்கு வீட்டில் இருந்து கடிதம் வருவது, போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வருவது என பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்து வருகிறது. 

அந்த வகையில் நேற்று ஐஸ்வர்யாவின் தாய் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார். பல முறை ஐஸ்வர்யா தனது தாய் குறித்துமற்ற போட்டியாளர்களிடம் பேசி உள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில் அவர் தனது தாய் குறித்து முன்னர் பாலாஜியிடம் பேசிக்கொண்டுஇருந்தார். அப்போது, "மாதம் தோறும் நான் என் அம்மாவுக்கு காசு மட்டும் அனுப்புவேன். ஆனால் அந்த காசு எங்கிருந்து வருகிறது என்பது குறித்து அவர் எதுவுமே கேட்கமாட்டார். 10ம் தேதிக்கும் காசு அனுப்பமுடியவில்லை என்றால் நான் வேதனைப்படும் படி பேசுவார்" என்று கூறினார். அவர் தனது தாய் குறித்து பேசிய அடுத்த நாள் பிக்பாஸ் வீட்டிற்கு அவரது தாய்வந்தார். அதனை பார்த்தும் மற்ற ஹவுஸ்மேட்கள் அனைவரும் கண்கலங்கி விட்டனர். பாலாஜி மற்றும் மும்தாஜிடம் தனது மகள் செய்த தவறுகளை மன்னித்து விடும் படி ஐஸ்வர்யாவின் தாய் கேட்டுக்கொண்டார். மேலும் தனது மகளிடம், மற்றவர்களை மதித்து நடக்கும் படியும் அவர் அறிவுரை கூறினார். இதே போல நேற்று வீட்டிற்கு வந்தடேனியின் தாய் மற்றும் அவரது வருங்கால மனைவியும் மும்தாஜ் மற்றும் பாலாஜி கூறுவதை கேட்டு நடந்து கொள்ளும் படி டேனிக்கு அறிவுரை கூறினர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close