மீண்டும் இணையும் பாலாஜி-நித்யா?

  Newstm Desk   | Last Modified : 30 Aug, 2018 07:58 pm
is-balaji-and-nithya-reuniting-again

பிக்பாஸ் பிரோமோவில் இன்று பாலாஜியை சந்திக்க நித்யா வீட்டிற்கு வருகிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த நாட்களில் நடந்த சென்டிமெண்ட் காட்சிகளை தாண்டி இன்று எக்ஸ்டிரா விஷயங்கள் நடக்கவிருக்கிறது. இந்த சீசன் தொடக்கத்தில் பலருக்கும் ஒரு கேள்வி எழுந்தது. பாலாஜி மற்றும் நித்யாவை ஒன்றாக இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வர காரணம் என்ன என்பது? 

அவர்களுக்குள் நிறைய பிரச்னைகள் இருப்பது முன்னரே அனைவருக்கும் தெரிந்திருக்க, நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் இருவருக்கும் இடையே முட்டிக்கொண்டது. பின்னர் அந்த பிரச்னைகள் குறைந்து இருவரும் நல்ல நண்பர்கள் என்ற ரீதியில் பழக நினைத்தனர். ஆனால் நித்யா பாதியிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

வீட்டில் தனியாக இருந்த பாலாஜி தன்னால் முடிந்த வரை கோபத்தை குறைத்துக் கொண்டு மாற முயற்சித்து வருகிறார். இந்நிலையில் நித்யாவிடம் இருந்து பாலாஜிக்கு வந்த கடிதத்தில், தான் இன்னும் அவருடன் தோழியாக மட்டும் தான் பழக விரும்புவதாக கூறினார். அந்த கடிதத்தை படித்த பாலாஜி, அப்போதே அழுதுவிட மற்ற போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். 

இந்நிலையில் இன்று பிக்பாஸ் இல்லத்திற்கு நித்யா வருகிறார். உள்ளே வந்ததும் அவர் பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டு அழுகிறார்.

பின்னர் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் சென்று பேசும் நித்யா, அவர்களின் குறை மற்றும் நிறைகள் பற்றி பேசுகிறார். அப்போது மும்தாஜிடம், மற்றவர்களின் உணர்வுகளை வைத்து விளையாட வேண்டாம் என்கிறார். நித்யாவின் கருத்தை மறுத்து மும்தாஜ் பேசுகிறார்.

ஆக, கடந்த 3 நாட்களாக பிரச்னையே இல்லாமல் இருக்கும் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு பிரச்னையை நித்யா தொடங்கி வைத்து செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close