இந்த வாரம் சென்றாயன் தான் டார்கெட்: பிக்பாஸ் பிரோமோ 2, 3

  Newstm Desk   | Last Modified : 31 Aug, 2018 02:43 pm

biggboss-promo-2-3

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சென்டிமெண்ட் காட்சிகள் முடிந்து சண்டைகள் தொடங்குகிறது. வார வாரம் ஒருவரை வைத்து தான் பிக்பாஸ் நிகழ்ச்சி நகரும். கடந்த வாரங்களில் மும்தாஜ், மகத், ஐஸ்வர்யா ஆகியோர் மாற்றி மாற்றி அந்த இடத்தை பிடித்திருந்தனர். அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியில் சென்றாயன் மாட்டிக்கொள்கிறார். 

டாஸ்க்கின் போது அவர் ஏதோ தவறு செய்துவிட, அதனை மற்ற போட்டியாளர்கள் தட்டிக்கேட்கின்றனர். அந்த தவறை ஏற்றுக்கொள்ளாமல் சென்றாயன் பேசுகிறார். இதனால் மற்றவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. 

அடுத்த பிரோமோவில், பிக்பாஸ் போட்டியாளர்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் புள்ளிகள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. 

ஃபிரீஸ் டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்கள் உறவினர்கள் வந்த போது, விதிமுறைகளை மீறினர் என்பதால் இந்த தண்டனை. பிக்பாஸ் போட்டியாளர்கள் இதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கின்றனர். சும்மாவே சாப்பாட்டு பிரச்னை நடக்கும் பிக்பாஸ் வீட்டில், இந்த வாரம் என்னவெல்லாம் நடக்குமோ?

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close