என்ன எல்லாரும் சிரிச்ச முகமா இருக்கீங்க - பிக்பாஸ் ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 01 Sep, 2018 03:30 pm
bigg-boss-promo-1

எப்போதும் சனிக்கிழமை என்றாலே பிக்பாஸின் மீது ஆர்வம் அதிகரிக்கும். அதுவும் கடந்த சனிக்கிழமை பட்டாசு ரகம். இந்த வாரம் ஹவுஸ் மேட்களுக்குள் பெரிதாக எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. ஓவ்வொருவரின் குடும்பத்தினரும் வீட்டிற்கு வந்தது, பார்வையாளர்களின் கண்களையும் ஈரமாக்கியது. 

இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அகம் டி.வி வழியே ஹவுஸ்மேட்ஸை சந்திக்கும் கமல், 'ஃப்ரீஸ்' என்கிறார். சோஃபாவில் உட்காரப் போனவர்கள் ஒவ்வொருவரும் பாதியிலேயே பொஸிஸனில் நிற்கிறார்கள். இதில் பாலாஜிக்குத்தான் கஷ்டம். ஏனென்றால் அவரது போஸ் அப்படி. 

"என்ன எல்லாரும் சிரிச்ச முகமா உட்கார்ந்துருக்கீங்க, போனவாரம் பிக்பாஸ் வீட்டையே கழுவி ஊத்த வச்சி கண்ணீர் சிந்திட்டீங்க. இந்தப் பாசமும் கண்ணீரும் நீடிக்குதான்னு பார்ப்போம். இப்போ 9 பேர் 8 பேரா குறையப் போறாங்க. இறுதிக் கட்டத்தை நோக்கி" என சொல்லிவிட்டு, ஹவுஸ் மேட்ஸை ரிலீஸ் செய்யாமல் பிரேக் விட்டு விட்டு செல்கிறார். 

"பாவம் சார் நாங்க" என டேனி கூற, அதற்கு சிரிப்பை பதிலாகக் கொடுத்துவிட்டு நகர்கிறார் கமல். 
www.newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close