பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் டேனி!

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2018 09:55 am
danny-got-evicted-from-biggboss-house

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று டேனியில் எவிக்டாகிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் தொடங்கி 80 நாட்களை நெருங்கிவிட்டன. நாளுக்கு நாள் போட்டியின் தன்மை கடுமையாகி கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் போட்டியாளர்களின் சொந்தங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததை அடுத்து விக்ரமன் படம் போல இருந்தது பிக்பாஸ் வீடு. இதனை பிக்பாஸின் தூதுவனாக வந்த ஜோக்கர், "இது ஆனந்தம் படம் இல்லை, பிக்பாஸ் வீடு" என்று கலாய்த்து விட்டு சென்றார். 

இந்நிலையில் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் வெற்றிப்பெறுவதற்கான போட்டிகள் தொடங்கியுள்ளன. ஒரு பக்கம் போட்டிகள் இருக்க, வார வாரம் எதிர்பார்க்காத ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அந்த வகையில் இன்று பிக்பாஸ் வீட்டில்இருந்து டேனியல் வெளியேறுகிறார். 

இவர் தான் பிக்பாஸ் டைட்டிலை வெள்வார் என்று பலரும், தெரிவித்து வந்த நிலையில் மக்களின் வாக்குகளை குறைவாக பெற்ற காரணத்தால் இன்று அவர் வெளியேற்றப்படுகிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close