ஐஸ்வர்யாவை காப்பாற்றியது கடவுளா? யாஷிகாவா?- ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2018 02:22 pm
who-saved-aishwarya-in-biggboss-god-or-yashika

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து எவிக்‌ஷன் நாமினேஷனுக்கு செல்லாமல் தப்பித்து வரும் ஐஸ்வர்யாவை காப்பாற்றுவது கடவுள் இல்லை அவரது தோழி யாஷிகா தான் என மற்ற போட்டியாளர்கள் கமலிடம் நேற்று தெரிவித்தனர். 

என்னடா... சண்டையே நடக்கல என்று காத்திருந்தவர்களை குஷிப்படுத்தும் வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் சில விஷயங்களை தூவி விட்டு சென்றுள்ளார் கமல். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களில் யாருக்கு வெற்றியாளராகும் தகுதி இல்லை என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்வி போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு யாஷிகா, சென்றாயன் ஆகியோர் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக நுழைந்திருக்கும் விஜயலட்சுமியின் பெயரை கூறினர். மற்றவர்கள் 70 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் பல கடுமையான சம்பங்களை கடந்து வந்திருக்கும் போது, அவர் வெற்றி பெறுவது சரியல்ல என்று அவர்கள் தெரிவித்தனர். 

உடல்ரீதியாக வீக்காக இருக்கும் ஜனனியால் சில டாஸ்க்குகள் செய்ய முடியாது என்பதை காரணமாக கூறி ஜனனி பெயரை ஐஸ்வர்யா கூறினார். பாலாஜி மற்றும் டேனி ஆகியோர் மாற்றி மாற்றி தங்களது பெயர்களை கூறிக்கொண்டனர். 

பின்னர் ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி மற்றும் மும்தாஜ் ஆகியோர் ஐஸ்வர்யாவின் பெயரை கூறினார். அவர் ஒவ்வொரு முறையும் நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுகிறார். ஒரு முறையாவது அவர் நாமினேஷனுக்கு சென்று மக்களின் ஆதரவை பெற்று வந்தால் தான் அவருக்கு தகுதி இருக்கிறது என்பதை எங்களால் ஒப்புக்கொள்ள முடியும் என்று கூறினர். அதற்கு, தன்னை கடவுள் காப்பாற்றுவதாக ஐஸ்வர்யா கூறினார். கடவுள் காப்பாற்றவில்லை யாஷிகா தான் இரண்டு முறை காப்பாற்றி இருக்கிறார் என்று ரித்விகாவும் ஜனனியும் கூறுகின்றனர். உடனே அப்படி சொல்லக்கூடாது என்று கமல் கிண்டல் செய்தார். 

ஒட்டுமொத்தமாக ஐஸ்வர்யாவுக்கு எதிராக போட்டியாளர்கள் திரும்பி உள்ளனர். இந்த வாரம் மீண்டும் யாஷிகா தலைவராகி உள்ளார். எனவே ஐஸ்வர்யாவை அவர் மீண்டும் காப்பாற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close