அன்பு காட்டி ஏமாற்றுகிறாரா மும்தாஜ்? - பிக்பாஸ் பிரோமோ

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2018 09:46 am
3-09-2018-biggboss-promo-1

பிக்பாஸ் இல்லத்தில் 7 பேர் மட்டுமே உள்ள நிலையில் இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடக்கிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளர் என கருதப்பட்ட டேனி நேற்று வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 7 பேர் உள்ளனர்.

இன்று வெளியாகி இருக்கும் முதல் பிரோமோவில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடக்கிறது. இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் ஐஸ்வர்யா தத்தாவை நாமினேட் செய்கின்றனர். அவர் இத்தனை வாரங்களில் ஒரு முறை தான் நாமினேட்டாகி உள்ளார். பல முறை அவரை யாஷிகா தனது தலைவர் பொறுப்பை வைத்து காப்பாற்றி உள்ளார். இந்நிலையில் இந்த வாரம் அவர் நாமினேஷனை சந்தித்தே ஆக வேண்டும் என்பதில் மற்ற போட்டியாளர்கள் மிகவும் உறுதியாக உள்ளனர்.

மற்றவர்கள் நாமினேட் செய்யும் போது, ஐஸ்வர்யாவுக்கு மும்தாஜ் ஆறுதல் தெரிவித்ததாக பாலாஜி மற்றவர்களிடம்  கூறிக்கொண்டு இருந்தார். மேலும் அவர் அன்பைக் காட்டி ஏமாற்றுகிறார் என்பது போல போட்டியாளர்கள் பேசிக்கொண்டு  இருந்தனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close