தமிழ் மக்கள் முட்டாள்கள் இல்லை: பிக்பாஸ் பிரோமோ 2

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2018 12:30 pm
biggboss-promo-2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பிரோமோவில் தமிழ் மக்கள் முட்டாள்கள் இல்லை என்று ஐஸ்வர்யாவிடம் விஜயலட்சுமி கூறுகிறார்.

பிக்பாஸ் நிழ்ச்சியில் இனி வரும் டாஸ்க்குகள் முன்பை விட கடுமையானதாக இருக்கும். அதற்கு தகுதியில்லாதவர்கள் வரும் நாட்களில் வெளியேற்றப்படுவர். 

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது பிரோமோவில், போட்டியாளர்கள் சிலர் இருட்டான அறையில் அமர்ந்திருக்கின்றனர். விஜயலட்சுமி தன் எதிரில் இருக்கும் ஐஸ்வர்யாவிடம், "உங்களுக்கு தமிழக மக்கள் பற்றி தெரியுமா என தெரியவில்லை. அவர்கள் பிடித்திருந்தால் தலையில் தூக்கி வைத்துக்கொள்வார்கள். ஆனால் முட்டாள்கள் இல்லை" என்று கூறுகிறார். 

இதனை கேட்டு ஐஸ்வர்யா, தனியாக அமர்ந்து அழுகிறார். யாஷிகா அவரை சமாதானப்படுத்துகிறார். கடந்த வாரங்களில் கோபத்தை மட்டும் வெளிப்படுத்திக் கொண்டு இருந்த ஐஸ்வர்யா, கடந்த சில நாட்களாக அழுதுக் கொண்டு இருக்கிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close